முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 1

 

மழை 1

கேரளாவில் உள்ள நேரியமங்கலத்தில் அமைந்திருந்த விஷ்வம் விலாஸ் கலகலவென காணப்பட்டது.

ஏனெனில் இன்று அவ்வீட்டு இளைய தலைமுறையினரில் மூத்தவனான சுஜித்திற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம்.

பிரியாவின் தந்தை முத்துவேலும், சுஜித்தின் தந்தை மாதவன் நாயரும் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நண்பர்கள். ஆம், இருவரும் கல்ப்பாக்கம் அனுமின் நிலையத்தில் வேலைப் பார்த்தனர்.

மாதவன் ஓய்வு பெற்றப் பின்னர் தன் சொந்த ஊருக்கான கேரளாவிற்கு வர, முத்துவேலும் ஓய்வு பெற்றப் பின்னர் சென்னையில் சொந்த வீட்டை வாங்கி குடிபெயர்ந்து விட்டார்.

பிரியா சென்னையில் ஒரு வங்கியில் ஆபிஸராக பணிபுரிகிறாள். சுஜித் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறான்.

இது ஒரு காதல் திருமணம். அதுவும் பெற்றோர்களால் சந்தோஷமா ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெற இருக்கும் திருமணம்.

இன்னும் பத்து நாளில் திருமணம் என்று இருக்கையில், இன்று மாப்பிள்ளை வீட்டு முறையுடன் நிச்சயம் முடிந்திருந்தது.

"கிருஷ்ணா! பந்தியைப் பாரு" என்று தன் நண்பனை ஏவியபடி தான் உடுத்தியிருந்த வேஷ்டியை இடுப்பிற்கு மேலே வீரமாக கட்டிக்கொண்டு பரபரப்பாக திரிந்தான் அவன்.

அவன் யதுநந்தன். சுஜித்தின் ஒரே தம்பி. எம்பிஅ பட்டதாரி. கிடைத்த நல்ல ஐடி வேலையை எல்லாம் ஓரம் தள்ளி நேரியமங்கலத்தில் ஒரு பெரிய துணிக்கடை வைத்திருக்கிறான்.

மகன் தன் சொந்த முயற்சியில் இவ்வாறு ஈடுபடுகிறான் என்பதை உணர்ந்த தந்தை மற்றும் தமையன், அவர்கள் சேமித்திருந்த பணத்தை யதுநந்தனிகற்காக சந்தோஷத்துடன் கொடுத்தனர்.

யதுநந்தனும் அதைக் கடனாக பெற்றுக்கொண்டான். கடனாக இல்லையெனில் அதை அவன் வாங்கிருக்கவே மாட்டான். அப்படி ஒரு ரோஷக்காரன்.

(உரையாடல்கள் மலையாளத்தில் இருந்தாலும் இங்கு அனைத்தும் தமிழில் காணப்படும்.)

"வாங்க! வாங்க!  எல்லாரும் சாப்பிட்டு கிளம்புங்க" என்று வந்தவர்களை பொறுப்பாக வரவேற்றான் யதுநந்தன்.

பெண் வீட்டார் தரப்பில் பெண்ணின் குடும்பத்தைத் தவிர யாருமே வரவில்லை. ஏனெனில் முத்துவேலும், அவரின் மனைவி அகல்யாவுமே காதல் திருமணம் என்பதால் குடும்பத்தில் இருந்து ஒத்துக்கப்பட்டு விட்டனர்.

தன் அக்காவின் தலையில் அணிவிக்கப்பட்டிருந்த கனமான பூச்சரத்தை எடுத்துக் கொண்டிருந்தாள் பவதாரிணி.

அப்போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த, யதுநந்தனின் கண்களில் அது ஏதேர்ச்சையாகப் பட...

"பிரியா ஃபோட்டோகிராஃப்பர் போட்டோஸ் எடுப்பாங்க. அதுக்குள்ள ஏன் அவள் பூச்சரத்தை கழட்டுறாள்" என்று கோபத்தை அடக்கி ஆதங்கத்துடன் கேட்டான் யதுநந்தன்.

பார்வை பிரியாவிடம் இருந்தாலும், அவனின் கோபமெல்லாம் பவதாரிணியின் மேல் தான்.

"நான் தான் கழட்ட சொன்னேன் யது. ரொம்ப வெயிட்டா இருக்கு. சீக்கிரம் ஃபோட்டோகிராஃப்பரை எடுத்து முடிக்கச் சொல்லுடா. சுஜித்தையும் ரெடி ஆக சொல்லு" என்று சலிப்புடன் கூறினாள் பிரியா.

காலையில் சீக்கிரமே எழுந்ததால் அசர்வாக உணர்ந்தாள் பிரியா. பிரியா, தன் தந்தையின் ஜாடையில் தாயின் நிறமான வெள்ளை நிறத்தில் பிறந்து ஜொலிப்பவள். முகம் அத்தனை லட்சணமாக இருக்காது என்றாலும் அவளின் நிறமே அவளை பார்ப்போர்கள் கியூட் என்று சொல்ல வைக்கும்.

பவதாரிணி, தந்தையின் கோதுமை நிறத்தில் தாயின் அழகோடு மிக லட்சணமாகப் பிறந்தவள். ஐந்தே கால் அடி உயரத்தில், உயரத்திற்கேத்த உடலமைப்புடன் கனகச்சிதமாக இருப்பாள். அவளை பார்ப்பவர்களின் கண்கள் எல்லாம் மறுமுறை அவளைப் பார்க்க தூண்டும். அவர்களின் உதடு இவள் அழகி என்று கண்டிப்பாக முணுமுணுக்கும்.

"நீ சொல்லித் தான பிரியா நான் பூச்சரத்தை எடுத்தேன்" என்று மறுபடியும் பூச்சரத்தை அக்காவின் தலையில் சூடி விட்டு வேகமாகச் சென்றாள் பவதாரிணி.

"திமிரு பிடிச்சவள்" என்று யதுநந்தன் முணுமுணுக்க,

"திமிரு பிடிச்சவன்" என்று பவதாரிணியும் முணுமுணுத்தபடியே சென்றாள்.

"அச்சம்மா" என்று படுக்கையில் வீற்றிருந்த தன் பாட்டியை காண சாப்பாடுடன் யதுநந்தன் உள்ளே நுழையும் போதே, அவரை அமர வைத்து சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள் பவதாரிணி. கூடவே இருவரின் குடும்பமும்.

அச்சம்மா, அவரின் பெயர் லட்சுமி. மாதவனின் அன்னை என்பதைத் தாண்டி யதுநந்தனின் செல்லப் பாட்டி.

தன்னை சீராட்டி, பாராட்டி வளர்த்த அச்சம்மாவை இந்நிலையில் காண பவதாரிணி க்கு கண்களே குலமாகியது. ஆம், இன்று காலை தான் அவள் சென்னையிலிருந்து கேரளா வந்தடைந்தாள்.

பவதாரிணி மூன்று வருட கல்லூரி படிப்பை முடித்த பின்பு டீச்சராக பணிபுரிகிறாள். பெண் வீட்டார் மூன்று நாட்களுக்கு முன்னமே இங்கு வந்துவிட, பவதாரிணி மட்டும் முன்னே வர பிடிக்காமல் வேலை இருக்கிறது என்று பொய் சொல்லி நிச்சயம் அன்று வந்து சேர்ந்தாள். இன்னும் பத்து நாட்கள் இங்கே இருக்க வேண்டுமா என்று இப்போதே மலைப்பாக இருந்தது.

அறையில் இரு குடும்பமும் இருந்ததால் அவன் மனதிற்குள்ளேயே பவதாரிணியை வறுத்தெடுத்தான். இல்லையெனில் தன் அச்சம்மாவிற்கு எவளோ ஒருத்தி அதுவும் பவதாரிணி சாப்பாடு ஊட்டுவதைப் பார்த்து அவன் சும்மா இருப்பான்னா என்ன?

"அச்சம்மாவுக்கு நான் தான் சாப்பாடு கொண்டு வந்திருப்பேனே"  என்று தன் அன்னை அம்பிகாவைப் பார்த்து கேட்டான் யதுநந்தன்.

"பவதாரிணி ஆசைப்பட்டு கொடுக்குறா டா... விடேன்" என்று மகனிடம் மெல்ல கெஞ்சினார் அன்னை.

"எவ்வளவு பெருசா வளர்ந்துட்டா என் பேத்தி!" என்று வெகு நிதானமாகப் பேசிய அச்சம்மா, தன்னுடைய சுருங்கிய வறண்ட கைகளை வைத்து பவதாரிணியின் தலையை வருடினார்.

இரண்டு வருடங்கள் முன்னர் ரோட்டில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த லட்சுமியின் மீது ஒரு ஆட்டோ மோதியது. உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் அவரால் அதற்கு பிறகு நடக்கவே முடியவில்லை. எத்தனையோ சிகிச்சைகள் கொடுத்தாயிற்று.

"மாமா, என்னுடைய பிரண்ட்டோட அண்ணா கேரளாவுல டாக்டரா இருக்காரு. அவரை ஒரு தடவை இங்க வரச் சொல்லவா? அச்சம்மாவைப் பார்க்க" என்று மாதவனைப் பார்த்து கேட்டாள் பவதாரிணி.

"அதெல்லாம் எதுக்கு... ஒன்னும் வேண்டாம்" என்று வெடுக்கென்று அனைவரின் முன் கூறிவிட்டான் யதுநந்தன் பொதுப்படையாக.

'இவன் கிட்ட யாரு கேட்டா?ச்ச' என்று பவதாரிணி கோபத்துடன் நினைக்க,

மகனைப் பார்த்தபடியே தயங்கினார் மாதவன்.

"மாமா, ஒரே ஒரு தடவை அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமே!" என்று விடாது கேட்டாள் பவதாரிணி.

"இந்த கிழவி இனி நடந்து என்ன மோலே பண்ண போறேன்" என்று விரக்தியாகச் சிரித்தார் லட்சுமி.

"அப்படி எல்லாம் சொல்லாதீங்க அச்சம்மா! நீங்க நடப்பீங்க... என் அச்சம்மா பழைய மாதிரி நடப்பாங்க" என்று பாட்டியின் பக்கத்தில் வேகமாக வந்து அமர்ந்தான் யதுநந்தன்.

ஒரு பக்கம் யதுநந்தன் அமர்ந்திருக்க, இன்னொரு பக்கம் பவதாரிணி அமர்ந்திருக்க, இருவரையும் மாறி மாறி பார்த்தார் அச்சம்மா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 2

  மழை 2 அங்கே பக்கத்திலேயே ஒரு அழகான வீட்டை பெண் வீட்டாரிற்காக பார்த்திருந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர். பிரியா மற்றும் சுஜித் நிச்சயம் முடிந்த பின்னர் அங்கே ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு சாப்பிடச் செல்ல முடிவு செய்தனர்.  "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா போக வேண்டாம் சுஜித்" என்று கூறிய அம்பிகா, "பவதாரிணியைக் கூட்டிட்டு போங்க" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.  "ச்ச... சினிமாக்கு போய் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தால் பவதாரிணியை கூட அனுப்புறாங்களே!" என்று சலித்துக் கொண்டவன்... உடனே,"அவளும் வரட்டும் பிரியா! அங்க தியேட்டர் பக்கத்துலயே ஒரு மால் இருக்கு... அங்க அவளை இருக்க சொல்லிடலாம்" என்று உற்சாகமாகக் கூறினான் சுஜித்.  "தெரியாத ஊர்... தெரியாத பாஷை... அவள் எப்படி தனியா இருப்பா சுஜித்" என்று தங்கையின் மேல் அக்கறை கொண்டு கடுகடுத்தாள் பிரியா. "ரிலாக்ஸ் பிரியா... நம்ம யதுவையும் கூட்டிட்டு போயிடலாம். அவன் அவளுக்கு துணைக்கு இருப்பான்" என்று ஐடியா வந்தவனாக கூறினான் சுஜித். "சூப்பர் நல்ல ஐடியா தான்... சரி இரு நான் முதல்ல பவ...