மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...
மழை 1 கேரளாவில் உள்ள நேரியமங்கலத்தில் அமைந்திருந்த விஷ்வம் விலாஸ் கலகலவென காணப்பட்டது. ஏனெனில் இன்று அவ்வீட்டு இளைய தலைமுறையினரில் மூத்தவனான சுஜித்திற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம். பிரியாவின் தந்தை முத்துவேலும், சுஜித்தின் தந்தை மாதவன் நாயரும் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நண்பர்கள். ஆம், இருவரும் கல்ப்பாக்கம் அனுமின் நிலையத்தில் வேலைப் பார்த்தனர். மாதவன் ஓய்வு பெற்றப் பின்னர் தன் சொந்த ஊருக்கான கேரளாவிற்கு வர, முத்துவேலும் ஓய்வு பெற்றப் பின்னர் சென்னையில் சொந்த வீட்டை வாங்கி குடிபெயர்ந்து விட்டார். பிரியா சென்னையில் ஒரு வங்கியில் ஆபிஸராக பணிபுரிகிறாள். சுஜித் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறான். இது ஒரு காதல் திருமணம். அதுவும் பெற்றோர்களால் சந்தோஷமா ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெற இருக்கும் திருமணம். இன்னும் பத்து நாளில் திருமணம் என்று இருக்கையில், இன்று மாப்பிள்ளை வீட்டு முறையுடன் நிச்சயம் முடிந்திருந்தது. "கிருஷ்ணா! பந்தியைப் பாரு" என்று தன் நண்பனை ஏவியபடி தான் உடுத்தியிருந்த வேஷ்டியை இடுப்பிற்கு மேலே வீரமாக கட்டிக்கொண்...
கருத்துகள்
கருத்துரையிடுக