"கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட
எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன்.
கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான்.
"இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க,
"என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன்.
"என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா.
"எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன்.
"சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுடன் கூறினான் கிருஷ்ணா.
"கிருஷ்ணா... இரு டா! என் அத்தைப் பொண்ணு விடாமல் கால் பண்ணிட்டே இருக்காள்... நான் பேசிட்டு வரேன்" என்று கடுப்புடன் கட் செய்த யதுநந்தன்,"இவள் வேற" என்று எரிச்சலுடன் முணுமுணுத்தபடியே ஸ்பீக்கரில் போட்ட படி "சொல்லு ரேஸ்மி" என்று அவன் கால்லை எடுத்து பேசவும், பவதாரிணி படியேறி வரவும் சரியாக இருந்தது.
"யது அத்தான்!"என்று ரேஷ்மியின் குரல் கேட்க,
என்ன அந்த பவதாரிணியுடைய ஆட்டத்துக்கு ஃபுல் ஸ்டாப் வைக்குறேன்... அவளை ஓட ஓட விரட்டுறேன். இனி இந்த வீட்டு பக்கமே தலை வைத்து படுக்க மாட்டாள்ன்னு தீர்மானமா சொன்னீங்களே அத்தான்... அவளை பழிவாங்கிட்டீங்களா...அவளே விலகிப் போயிடுவா..அவளை அப்படி போக வைப்பேன்ன்னு சொன்னீங்க தானே அதான் கேட்குறேன்" என்று ரேஷ்மி கூறுவது பவதாரிணியில் காதில் விழுந்து அதிர்ச்சியில் தட்டை கீழே போட, சத்தம் வந்த புறம் பார்த்த யதுநந்தனோ அதிர்ச்சி அடைந்தான்.
அவன் அங்கு பவதாரிணியை எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும் நண்பர்களிடம் பேசும் போது ஸ்பீக்கரில் போட்டு பேசுவது யதுநந்தனிற்கு வழக்கம். அப்படித் தான் இன்றும் வைத்திருந்தான். அவனின் கெட்ட நேரம் இன்று போல!
"பவதாரிணி" என்று முணுமுணுத்தவன், வேகமாக கால்லை துண்டித்து அவள் பக்கம் ஈஇஈவர, சிலையாய் உறைந்து நின்றிருந்த மங்கையவளோ, "அப்போ என்கிட்ட நீங்க பழகுன எல்லாமே பொய்....அப்படித்தானே! அப்படித்தானே! சொல்லுங்க" என்று கத்தியபடி கதறினாள் பவதாரிணி.
"பவி... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு" என்று அவளின் கையைப் பிடிக்க முயன்ற யதுநந்தனை, விட்டு பின்னே வேகமாக விலகினாள் பவதாரிணி.
"நான் கேட்டதுக்கு பதில் வேணும்... ஃபோன்ல நான் கேட்டது எல்லாம் உண்மையா!" என்று அவள் ஆவேசத்துடன் கேட்க,
"ஆமா, உண்மை தான்... நான் உன்கிட்ட பழகினது எல்லாம் பொய் தான்" என்று அவளின் கண்களை சங்கத்துடன் பார்த்தபடி யதுநந்தன் கூற, "அப்போ நேத்து எனக்கு எதுக்கு டா முத்தம் கொடுத்த... முத்தம் மட்டுமா கொடுத்த... என்னை ஆசை தீர அனுபவிச்சியே!ச்சி எல்லாம் உடல் சுகத்துக்கு தானா... உனக்கு அது தான் வேணும்னா அதுக்குன்னு இருக்குற பொண்ணுங்க கிட்ட போக வேண்டியது தானேடா பொறுக்கி... என் காதல்ல.. என் உடம்புல ஏன்டா விளையாடுன" என்று அவனின் சட்டையைப் பிடித்து கதறியவள் அவனின் நெஞ்சில் அடித்தாள்.
இத்தனை நேரம் கடைப்பிடித்திருந்த பொறுமை யதுநந்தனிற்கு பறந்தே விட்டது.
"வார்த்தையை அளந்து பேசு பவதாரிணி... உன்கிட்ட மட்டும் தான் நேத்து எல்லை மீறினேன்... மத்த பொண்ணுங்களை இதுவரை நான் தப்பா கூட பார்த்தது இல்லை... தப்பு தான் நேத்து நான் அப்படி பண்ணது ரொம்ப பெரிய தப்பு... அதுக்காக பொறுக்கின்னு லாம் சொல்லாத" என்று அழுத்தமாகக் கூறினான்.
"ஓ... சார் பண்ணின வேலைக்கு உங்களுக்கு கோபம், ரோஷம் எல்லாம் வருதோ! நான் உனக்கு என்ன பண்ணேன்.... ஏன் இப்படி என் வாழ்க்கையில் விளையாடுன" என்று அழுகையோடு கத்தினாள் பவதாரிணி.
"நீ மட்டும் என் உணர்வுகளோடு விளையாடலையா... என்னுடைய அச்சம்மாவா பங்கு போட நீ யாரு டி... யது எனக்குத் தான்! இனி அத்தைப் பொண்ணுன்னு சொல்லிட்டு நீ இங்க வராத... இந்த வீட்டுல எல்லாரும் எனக்கு அடிமை... யதுவும் எனக்கு அடிமை தான்... நான் நில்லுன்னா நிப்பான் உட்காருன்னா உட்காருவான் அப்படின்னு ரேஷ்மிக் கிட்ட திமிரா பேசின நீ ஒன்னும் நல்லவ இல்லை.... உனக்கு நல்ல பாடம் புகட்டனும்.... உன்னை நிரந்தமா விளக்கி ஒதுக்கணும்னு தான் உன் கூட பழகுற மாதிரி நடிச்சேன்... அன்னிக்கு எல்லாரையும் நான் தான் பிளான் பண்ணி படத்துக்கு அனுப்பினேன்... உன்னைத் தனியா மிரட்டி பயமுறுத்தலாம்னு தான் நான் பிளான் பண்ணி இருந்தேன். ஆனால் ச்ச... அது ஒரு ஆக்சிடென்ட்... ஆனால் நீயும் அதை தடுக்கலையே... என் கூட நல்லா என்ஜாய் தானே பண்ண" என்று அவனுக்கு இருந்த கோபத்தில் வேகத்தில் பவதாரிணியைப் பார்த்து நக்கலாக கூறினான்.
"உன் அத்தைப் பொண்ணு ரேஷ்மி கிட்ட நான் இந்த மாதிரி எல்லாம் பேசவே இல்லை... உன்னை மனசால காதலிச்சத தாண்டி நான் எந்த தப்பும் பண்ணலை... அச்சம்மா... அவங்களை விட்டு நான் போகணும் அதானே உனக்கு வேணும்... போயிடுவேன் இனி உங்க, பழ ச்சயார் முகத்துலயும் முழிக்க மாட்டேன். ஆனால் நேத்து நீ எனக்கு பண்ணின விஷயத்துக்கு கண்டிப்பா நீ பதில் சொல்லியே ஆகணும் எல்லார் முன்னாடியும்... நான் உன்னை காதலிச்சேன் அதனால மட்டும் தான் நீ தொட்டதுக்கு என்னையும் மீறி கரைஞ்சேன்... ஆனால் நீ என் மேல வன்மத்தை வைச்சிட்டு, பழிவாங்க நினைச்ச ஆள்... உன்னையெல்லாம்" என்று கோபத்துடன் அவள் இறங்கி செல்ல,
தன் தலையை கோபத்தில் கோதிய யதுநந்தன்,"ஓ... ஷிட்" என்று சுவற்றில் கால்லை ஒதறினான்.
கருத்துகள்
கருத்துரையிடுக