முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 2

 மழை 2


அங்கே பக்கத்திலேயே ஒரு அழகான வீட்டை பெண் வீட்டாரிற்காக பார்த்திருந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர்.


பிரியா மற்றும் சுஜித் நிச்சயம் முடிந்த பின்னர் அங்கே ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு சாப்பிடச் செல்ல முடிவு செய்தனர். 

"பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா போக வேண்டாம் சுஜித்" என்று கூறிய அம்பிகா, "பவதாரிணியைக் கூட்டிட்டு போங்க" என்று கூறிவிட்டு சென்று விட்டார். 

"ச்ச... சினிமாக்கு போய் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தால் பவதாரிணியை கூட அனுப்புறாங்களே!" என்று சலித்துக் கொண்டவன்... உடனே,"அவளும் வரட்டும் பிரியா! அங்க தியேட்டர் பக்கத்துலயே ஒரு மால் இருக்கு... அங்க அவளை இருக்க சொல்லிடலாம்" என்று உற்சாகமாகக் கூறினான் சுஜித். 

"தெரியாத ஊர்... தெரியாத பாஷை... அவள் எப்படி தனியா இருப்பா சுஜித்" என்று தங்கையின் மேல் அக்கறை கொண்டு கடுகடுத்தாள் பிரியா.

"ரிலாக்ஸ் பிரியா... நம்ம யதுவையும் கூட்டிட்டு போயிடலாம். அவன் அவளுக்கு துணைக்கு இருப்பான்" என்று ஐடியா வந்தவனாக கூறினான் சுஜித்.

"சூப்பர் நல்ல ஐடியா தான்... சரி இரு நான் முதல்ல பவா கிட்ட பேசுறேன்" என்று தங்களுக்கு கொடுத்த வீட்டிற்குச் சென்று தங்கையைத் தேடினாள். 

பிரியாவை விட பவதாரிணி ஐந்து வருடங்கள் சிறியவள். பிரியாவும் யதுநந்தனும் ஒரே வயதை ஒத்தவர்கள். யதுநந்தனை விட சுஜித் இரண்டு வருடங்கள் பெரியவன். 

சுஜித் அமைதி மற்றும் பொறுமை. ஆனால் யதுநந்தன் துறு துறு ரகம் மற்றும் பிடிவாதக்காரன். வீட்டிலும் அவனின் பேச்சு தான் ஓங்கி இருக்கும். ஏனெனில் யதுநந்தன் கெட்டிக்காரன்,சாமர்த்தியம் கொண்டவன். 

அவனின் இருபத்தி ஏழு வயதில் அவனுடைய கடையை திறம்பட கொண்டுச் செல்கின்றான். மாதத்தில் பத்தாம் நாள் வருவதற்குள் அவன் தந்தை மற்றும் அண்ணனிடம் வாங்கிய கடன் பணம், சரியான தவணையுடன் அவர்களின் வங்கி கணக்கிற்குச் சென்றுவிடும். 

தன் அச்சம்மாவின் கால்களில் எண்ணெயைத் தேய்த்தான் யதுநந்தன். 

"ஏன் குட்டா... பவதாரிணி என்கிட்ட பேசினாலே உனக்கு கோபம் வருது... நீயும் பெரியவனாகி மாறிடுவேன்னு பார்த்தால் இன்னும் சின்னப் பையனாட்டம் அவளை முறைக்குறியே யது" என்று வருத்தப்பட்டார் அச்சம்மா. 

"அச்சம்மா, இந்த குட்டாக்கு ஒரு குட்டன் பிறந்தாலுமே நான் என் அச்சம்மாக்கு ஒரு குழந்தை தான்" என்று கண்களைச் சிமிட்டி விட்டு, அச்சம்மாவை படுக்க வைத்து ஹாலிற்குச் சென்றான். 

தம்பியின் வருகைக்கு காத்திருந்த சுஜித் விஷயத்தைக் கூற, தன் அண்ணனிடம் விடாப்பிடியாக மறுத்து விட்டான் யதுநந்தன். 

"யது ப்ளிஸ் டா... எனக்காக... உன்கிட்ட நான் ஏற்கனவே எவ்வளவு தடவை சொல்லிருக்கேன். பிரியா என்னை லவ் பண்ணும் போது கூட தனியா வெளியே வந்தது இல்லை. ஏன் கும்பலா கூட அவள் கூட போனது இல்லை டா."

"ஆனால் இன்னிக்கு தான் நல்ல சான்ஸ் கிடைச்சது. இன்னும் பத்து நாள்ல கல்யாணம்னு அவளைக் கஷ்டப்பட்டு கன்வின்ஸ் பண்ணி கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன்டா... அதுக்குள்ள அம்மா இப்படி சொல்லி" என்று சலிப்பாகக் பெருமூச்சுவிட்ட சுஜித்தின் கண்களில் கண்ணீர் தேங்கியது. 

சிறிய வயதில் இருந்தே தனக்கு பிடித்தது நடக்கவில்லை என்றால் சுஜித்திற்கு கண்களில் கண்ணீர் சல்லென்று சுறந்து விடும். 

அண்ணனின் கண்ணீரில் சற்று இறங்கிய யதுநந்தன்,"டேய்! இதுக்கு ஏன் டா கண்ணெல்லாம் கலங்குற... சரி நான் வரேன் போதுமா... ஆனால் நான் வந்தாலும் அவள் வர மாட்டாள்" என்று அவன் தீர்மானமாகக் கூறிக்கொண்டிருக்கும்போதே, 

தன் கைப்பையுடன் வேகமாக வந்த பிரியா சுஜித்திடம், "சுஜி... பவா கிட்ட எப்படியோ ஒத்துக்க வைச்சிட்டேன்... ஆனால் யதுவும் நம்ம கூட வரதை அவக் கிட்ட சொல்லலை... அவள் ஒத்துப்பாளான்னு எனக்குத் தெரியலை" என்று வேகமாகக் கூறினாள் பிரியா. 

"பிரியா, நீ பதற்றப்படாத விடு... நான் வரதை அவள் கிட்ட சொல்ல வேண்டாம்... அங்கே போய் பார்த்துக்கலாம்... நீ சீக்கிரம் கிளம்பு அப்புறம் படத்துக்கு மிஸ் ஆயிடப் போது" என்று தன் அண்ணனின் கவலைப் படர்ந்த முகத்தைப் பார்த்து வேகமாகக் கிளம்பினான் யதுநந்தன். 

தன்னுடைய பலேனோ காரை எடுத்த யதுநந்தன் டிரைவர் சீட்டில் அமர, பின்னாடி சுஜித்தும் பிரியாவும் அமர்ந்து கொண்டார்கள். 

தன் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு தன் கைப்பையுடன் காரை நோக்கி பவதாரிணி வந்துக் கொண்டிருக்கும் போதே, 

தான் உட்கார்ந்திருந்த ஜன்னலைத் கீழே இழுத்த படி திறந்த பிரியா, "பவா, நீ முன்னாடி ஏறிக்கோ டி" என்று கெஞ்சல் கலந்த கொஞ்சலுடன் சொல்ல, 

முன்னே டிரைவர் தான் அமர்ந்திருக்கிறார் என்றே யூகித்து வேகமாக காரில் ஏறி கதவைச் சாற்றிக் கொண்டவள், கார் நகர்ந்த பின்னர் எதேர்ச்சையாக திரும்ப, டிரைவர் இருக்கையில் நீல வண்ண முழுக்கை சட்டை மற்றும் ஜீன் அணிந்திருந்த ஆறடி ஆண்மகனான யதுநந்தனைக் கண்டு அதிர்ச்சியில் கோபத்தின் உச்சிக்கே சென்றாள். 

தன் அக்காவைத் கத்தத் தூண்டிய மனதை சபை நாகரிகம் கருதி அடக்கிக் கொண்டாள். ஆனாலும் அவளின் மனது உலையாய்க் கொதித்தது. 

காரிற்குள் நடுவே இருக்கும் கண்ணாடி வழியாக வண்டி வருவதைப் பார்த்துக் கொண்டு இருந்த யதுநந்தனின் கண்களில், முகத்தை சுளித்து கோபமாக வைத்துக் கொண்டு இருந்த பவதாரிணியின் முக பாவனைகள் தென்பட, அவனுக்கோ சுர்ரென்று ஏறியது. அவனும் தன் கோபத்தை அடக்கிக் கொண்டான் தன் அண்ணன் வாழ்க்கைக்காக... 

அடுத்த ஒரு மணி நேரம் ஏதோ புழுக்கத்தில் இருப்பது போல் உணர்ந்தாள் பவதாரிணி. முதலில் சினிமா தியேட்டரில் காரை நிறுத்தச் சொன்ன சுஜித், பிரியாவுடன் இறங்கிக் கொள்ள... பவதாரிணியும் இறங்க முயன்று கதவைத் திறக்க முற்பட, கதவு திறக்கவில்லை. 

அவளின் நடவடிக்கையைக் கண்ட சுஜித், "நீ எங்க வர பவதாரிணி" என்று சிரித்துக் கொண்டே கேட்டான். 

"அத்தான் என்னையும் தானே கூட கூப்பிட்டாங்க" என்று புரியாமல் கேட்டாள் பவதாரிணி. 

"அது தான் நீ மால்ல இருக்க சொல்லி சொன்னேனே டி" என்று தயங்கி தயங்கி கூறினாள் பிரியா. 

பிரியா கூறிய தெல்லாம் அவள் மனதில் இருந்தது தான். ஆனாலும் யதுநந்தன் இருக்கும் போது மூளை சிதறல் வந்தது... கூடவே மன வலியும்... 

அதனாலேயே இறங்கி விட நினைத்தாள். "படம் முடிய மூனு மணி நேரம் இருக்கு பவதாரிணி அதுவரைக்கும் யது கூட பத்திரமா இரு" என்று சொல்லிவிட்டு இருவரும் வேகமாக சென்றே விட்டிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் பனியா முதல் மழையா! 1

  மழை 1 கேரளாவில் உள்ள நேரியமங்கலத்தில் அமைந்திருந்த விஷ்வம் விலாஸ் கலகலவென காணப்பட்டது. ஏனெனில் இன்று அவ்வீட்டு இளைய தலைமுறையினரில் மூத்தவனான சுஜித்திற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம். பிரியாவின் தந்தை முத்துவேலும், சுஜித்தின் தந்தை மாதவன் நாயரும் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நண்பர்கள். ஆம், இருவரும் கல்ப்பாக்கம் அனுமின் நிலையத்தில்  வேலைப்  பார்த்தனர். மாதவன் ஓய்வு பெற்றப் பின்னர் தன் சொந்த ஊருக்கான கேரளாவிற்கு வர, முத்துவேலும் ஓய்வு பெற்றப் பின்னர் சென்னையில் சொந்த வீட்டை வாங்கி குடிபெயர்ந்து விட்டார். பிரியா சென்னையில் ஒரு வங்கியில் ஆபிஸராக பணிபுரிகிறாள். சுஜித் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறான். இது ஒரு காதல் திருமணம். அதுவும் பெற்றோர்களால் சந்தோஷமா ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெற இருக்கும் திருமணம். இன்னும் பத்து நாளில் திருமணம் என்று இருக்கையில், இன்று மாப்பிள்ளை வீட்டு முறையுடன் நிச்சயம் முடிந்திருந்தது. "கிருஷ்ணா! பந்தியைப் பாரு" என்று தன் நண்பனை ஏவியபடி தான் உடுத்தியிருந்த வேஷ்டியை இடுப்பிற்கு மேலே வீரமாக கட்டிக்கொண்...

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...