மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...
தன் வீட்டிற்குள் வேகமாக ஓடி வந்தவள், யாரிடமும் முகம் கொடுக்காமல் அறைக் கதவை சாற்றிவிட்டு குமுறி அழுதாள்.
பின்ன பதினெட்டு வயது கூட அடையாத தான், இப்படி ஒரு ஆண்மகன்... அவன் இவள் காதலிக்கும் ஆண்மகனாக இருந்தாலும் கூட அவன் தொடும் போது அடித்து தடுத்திருக்க வேண்டுமே!
அவனோடு எப்படி எல்லாம் இழைந்திருக்கிறோம் என்று தன்னை நினைத்தே அவமானமாக கூனிக் குறுகினாள் பவதாரிணி.
அப்போது தான், 'நான் அவரை காதலிச்சேன் தான் ஆனால் அதுக்காக அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்காமலே எப்படி அவர் கூட ச்ச... ஆனால் அவர் என்கிட்ட எப்படி அப்படி! அவரும் என்னை காதலிக்குறாரா? ஆனால் நான் என் காதல்லை என்னை மீறி சொல்லும் போது அவர் என்னை விட்டு ஏன் விலகிப்போனாரு... ஒருவேளை இதெல்லாம் இப்போ கல்யாணத்துக்கு முன்னாடி தப்புன்னு அவரும் ரொம்ப ஃபீல் பண்றாரோ' என்று நினைத்த மங்கையவளுக்குத் தெரியவில்லை ஆணவனுக்குத் தன்னை காதலில் நெருங்கவில்லை காமத்தில் நெருங்கினான் என்று.
சற்று நேரம் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தவள் பின் வேகமாக தன் கண்களைத் துடைத்தபடி,'எப்படி இருந்தாலும் நான் நந்தன் அத்தானைத் தான் கத்திக்க போறேன்... தப்பு தான் ரொம்ப தப்பு தான் ஆனால் இனி கல்யாணத்துக்கு முன்னாடி அத்தானை கிட்ட விடக் கூடாது' என்று மனதில் வெட்கத்துடன் சிரித்தவள், 'ஐயோ இனி அவரை எப்படி ஃபேஸ் பண்ணப் போறோம்' என்று நாணத்தில் முகம் கூடி சிவந்தாள்.
அடுத்த நாள் மாலை, அச்சம்மாவை பார்க்க பவதாரிணி அவர்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும் போதே, அவளின் இதயம் வேகமாகத் துடித்தது.
தன்னவனை எப்படி பார்க்கப் போகிறோம் என்கிற வெட்கம் மங்கையவளை சூழ்ந்தது....
எப்போதும் போல் கதவைத் திறந்தார் அம்பிகா. அவருடன் சிரித்து பேசியபடி உள்ளே சென்றவள் யதுநந்தனை ஆவலாகத் தேட, "குட்டிமா! வந்துட்டியா" என்று எப்போதும் போல் பேத்தியை வரவேற்ற அச்சம்மா, பேத்தியின் கவனம் யதுநந்தனின் அறைப் பக்கத்தில் இருப்பதை உணர்ந்து,
"என்ன ஆச்சு குட்டிமா? அங்க என்ன டா பார்த்துட்டு இருக்க" என்று அக்கறையுடன் கேட்டார் அச்சம்மா.
"அது வந்து ஒன்னும் இல்லை அச்சம்மா" என்று சமாளித்தவள், அவருடன் நேரம் செலவழித்தாள்.
"இங்கே எதுக்கு டா என்னை கூட்டிட்டு வந்த" என்று பேக்கரியில் அமர்ந்திருந்த பிரியா டீ மற்றும் பட்டர் பிஸ்கட்டை சாப்பிட்ட படியே கேட்டாள்.
"நான் உன் கிட்ட ஒன்னு சொல்லணும் பிரீ... கோவிச்சிக்க மாட்டியே!" என்று இழுத்தான் சுஜித்.
"என்னடா சொல்லு! நான் கோவிச்சிக்க லாம் மாட்டேன்" என்று டீயில் முக்கி பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டு இருந்தாள் பிரியா.
"அது வந்து" என்று பிரியாவைப் பார்த்து தயங்கியபடியே இழுத்தான் சுஜித்.
"ஏய் சுஜூ! என்ன டா சொல்லு!" என்று புன்னகையுடன் கேட்டாள் பிரியா.
'இதுக்கு மேல உன் பாடி தாங்காது சுஜித்! சொல்லிடு' என்று மனதில் பேசிக் கொண்டவன், "பிரியா நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லுவென் டி... கோவிச்சிக்காமல் கேளு... நான் உன்னை ரொம்ப சின்சியரா லவ் பண்றேன் டி" என்று அவன் கூறி முடிக்க, அதிர்ச்சியில் வாயைப் பிளந்தாள் பிரியா.
"ஆமா டி... உன் மேல அவ்வளவு ஆசை... காதல்... பாசம் எல்லாமே இருக்கு... நானும் உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சிக்கிட்டே தான் இருந்தேன் ஆனாலும் பயம் டி.. இன்னிக்கு எப்படியோ தைரியத்தை வரவழைச்சு சொல்லிட்டேன்.. ப்ளிஸ் டி என் காதலை ஏத்துக்கோ டி முடியாதுன்னு சொல்லிடாத" என்று அவன் காதலுடன் வினவ, அவனின் காதலில் கரைந்தே விட்டாள் பிரியா.
ஏனெனில் பிரியாவிற்கும் சுஜித்தை ரொம்பவே பிடிக்கும். அவளால் அவன் காதலை மறுக்க எந்தவொரு காரணமும் இல்லாமல் போனது.
"லவ்ன்னா கல்யாணம் பண்ணிப்பியா இல்லை டைம் பாஸ் பண்ணிட்டு கழட்டி விட்டிடலாம்னு ஐடியாவா" என்று கேள்வியாகக் கேட்டாள் பிரியா.
"ஏய் லூசு! உன் மேல உயிரையே வைச்சிருக்கேன்னு சொல்றேன்... என் காதலை கொச்சப்படுத்தாத டி" என்று கண்களில் கண்ணீர் மல்க கூறுபவனிடம் அதற்கு மேல் சம்மதம் சொல்லாமல் இருக்க பிரியாவால் முடியவில்லை.
"ஐ லவ் யூ சுஜூ" என்று சுஜித்தைப் பார்த்து சந்தோஷத்துடன் புன்னகைத்தாள் பிரியா.
"உண்மையாவா டி" என்று வியந்தான் சுஜித்.
" ஆமா டா சத்தியமா" என்று அவனின் தலையில் அடித்தபடி சந்தோஷப்பட்டாள் பிரியா.
***
'நந்தன் அத்தான் எங்க?' என்று யோசித்தபடி அம்பிகா கொடுத்த சப்பாத்தியை விழுங்கினாள் பவதாரிணி.
"குட்டா எங்க அம்பிகா?" என்று கேட்டார் லட்சுமி.
"அத்தை! அவன் ரொம்ப நேரமா மாடியில தான் இருக்கான்" என்று பதில் கூறினார் அம்பிகா.
"சரி... நீ சப்பாத்தி சுட்டு கொடு... நான் அதை கொடுத்துட்டு வரேன்" என்று கூறினார் அச்சம்மா.
'மாடியில இருக்காரா? அவரைப் பார்க்கணும் போல இருக்கே!' என்று மனதில் ஏங்கினாள் மங்கையவள்.
"அத்தை இந்தாங்க யதுக்கு இதுல சப்பாத்தியும் குருமாவும் இருக்கு" என்று தட்டை மாமியாரிடம் நீட்டினாள் அம்பிகா.
"அத்தை! அச்சம்மா! நானே போய் அத்தான் கிட்ட கொடுத்துட்டு வந்திடுறேன்" என்று எழுந்தாள் பவதாரிணி.
"இது என்ன டா அதிசயம்! குட்டா வந்தாலே இன்னொரு பக்கம் போகுற என் பேத்தி... தைரியமாக அவன் கிட்ட சாப்பாடு கொடுக்க போறேன்னு சொல்றா" என்று சந்தோஷப்பட்டார்.
"அது முன்னாடி அவர் என்கிட்ட பேசலை ஆனால் இப்போ நல்லா பேசுறாரே" என்று புன்னகையுடன் கூறினாள் பவதாரிணி.
"அதெல்லாம் சரி டி... நீ ஒரு சப்பாத்தி தானே சாப்பிட்டு இருக்க... பாதியில எதுக்கு எழுந்திருக்குற... நானே போய் கொடுத்திடுறேன்" என்று கூறினார் அம்பிகா.
"இல்லை இல்லை அத்தை! நானே போய் கொடுத்துட்டு வரேன்... நீங்க எனக்கு சூடா சப்பாத்தி போட்டு வைங்க" என்று கிச்சன் வாஷ் பேஸினில் கையை கழுவியபடி, தட்டை அம்பிகாவிடம் வாங்கியவள் சிட்டாய் பறந்தாள் மாடிக்கு.
மாடிப்படி ஏறும் போதே முகத்தில் நாணம் பொங்க, இதயம் தாறுமாறாக எக்குத்தப்பாக அடித்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக