மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...
"ச்ச இவங்களை நம்பி வந்த என்னைச் சொல்லணும்" என்று கோபத்துடன் முணுமுணுத்தவளோ, கதவைத் திறக்க முற்பட அதுவல்லவோ லாக்காகி அல்லவா இருந்தது.
"நான் இறங்கணும்" என்று அவனைப் பார்க்காமலேயே விட்டேரியாகக் கூறினாள் பவதாரிணி.
"இறங்கி எங்க போகலாம்னு ஐடியா?" என்று கேட்டான் யதுநந்தன் நக்கலுடன்.
"எங்கேயோ போவேன்! ஆனால் இங்க இருக்க மாட்டேன்?" என்றாள் வேகத்துடன்.
"அப்படியெல்லாம் உன்னை விட முடியாது. ஏன்னா நீ... உன்னை என் பொறுப்புல நம்பி விட்டுட்டு போயிருக்காங்க" என்று கார் ஸ்டீரிங்கில் கை வைத்தபடியே அழுத்தத்துடன் கூறினான் யதுநந்தன்.
"ஓ... மானுக்கு வேட்டையன் காவல்லா!!" என்று பவதாரிணி நக்கல் கலந்த கோபத்துடன் கத்த,
"ஸ்டாப் இட் தாரிணி... அன்னிக்கு நான் பண்ணினது தப்பு தான்" என்று இத்தனை நேரம் ஓங்கி ஒலித்திருந்த யதுநந்தனின் குரலின் சுரம் இறங்க,
"ஓ சாருக்கு இப்போ தான் அவர் பண்ணினது தப்புன்னு தெரியது போல... எவ்வளவு சீக்கிரம் இல்லையா! ச்ச"என்று வெறுப்பாக காரை விட்டு இறங்க முடியாமல் இருக்கையிலேயே சாய்ந்து
கண்களை மூடியவளின் கண்களில் பழைய நினைவுகள் ரணமாய் ஓடியது.
இங்கே யதுநந்தனிற்கும் அத்தனை குற்ற உணர்ச்சி. அவனும் தன் இருக்கையிலேயே சாய்ந்து கண்களை மூட, அவ்விஷயம் மூளையையும், மனதையும் துளைத்தெடுத்தது.
வருடங்களுக்கு முன்னர்
அனுப்புரம், கல்ப்பாக்கம் அணுமின் நிலையம் ஊழியர்கள் வசிக்கும் கொவேர்ட்டஸ்
மாதவன் மற்றும் முத்துவேலின் வீடுகளும் ஒரே தளத்தில் பக்கம் பக்கம் தான்.
மாதவன் பிறக்கும் போதே பணக்காரர் தான். முத்துவேல் அப்படி இல்லை கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு தான் படித்து, இவ்வேலை கிடைத்து இப்பணியில் இருக்கிறார். இதில் காதல் திருமணம் வேறு. அதனால் யாருடைய ஆதரவும் இல்லை அவருக்கு கிடைக்க வேண்டிய சத்தும் கிடைக்கவில்லை.
பிரியா பிறந்து ஐந்து வருடங்கள் கழித்து தான் பவதாரிணி பிறந்தநாள். அப்போது குடும்ப சூழ்நிலைக்காக அகல்யாவுமே பக்கத்தில் ஒரு பிரைவேட் கம்பெனியில் அக்கௌன்டன்ட்டாக பணிபுரிந்தாள்.
அதனால் முக்கால்வாசி நேரம் மூன்று மாத குழந்தை பவதாரிணி யதுநந்தனின் வீட்டில் தான் இருப்பாள்.
மாதவனின் அன்னை லட்சுமி தான் தன் சொந்த பேத்தியைப் போல் பவதாரிணிக்கு தொட்டில் போட்டு மடியில் சுமந்து வளர்த்தார். அம்பிகாவும் பவதாரிணியை அப்படி கவனித்தாள்.
"நீ வேலைக்கு போயிட்டு வா அகல்யா...நாங்க இருக்கோம்... ராஜகுமாரி மாதிரி வளருவா இந்த அழகு குட்டி" என்று மூன்று மாத குழந்தையை கொஞ்சியபடி கூறினார் லட்சுமி.
"அச்சம்மா! நீங்க இந்த பாப்பா வந்ததுல இருந்து என் கூட விளையாடவே வரமாட்டிங்குறீங்க" என்று செல்லமாக கோபித்துக் கொண்டான் ஐந்தரை வந்து யதுநந்தன். அவனுக்கு அம்மாவை விட அவனின் அச்சம்மா என்றால் உயிர். அவரை தன் அண்ணனுக்கே விட்டுக் கொடுக்க மாட்டான். எல்லா பாசமும் தனக்கே வேண்டும் என்று அந்த வயதிலேயே அடம்பிடிப்பான்.
"பாப்பாவுடைய அம்மா வேலைக்கு போறாங்க குட்டா... அதனால பாப்பா நம்ம வீட்டுல தான் இருக்கும்... பாப்பா எவ்வளவு அழகா இருக்கு பாரு" என்று பவதாரிணியை யதுநந்தனின் காட்டினார் லட்சுமி.
அப்போது வாயைப் பிளந்து அழகாக சிரித்துக் கொண்டிருந்த பிள்ளையை யதுநந்தன் ரசித்தாலும் தன் அச்சம்மா அப்பிள்ளையைக் கொஞ்சுவது அவனுக்கு பிடிக்கவேயில்லை.
வருடங்கள் இப்படியே நகர, பள்ளி முடிந்த உடன் அச்சம்மாவைப் பார்க்க யதுநந்தன் வீட்டிற்கு வந்து விடுவாள் துறு துறு பவதாரிணி.
அப்போது ஆரம்பித்தது பிரச்சனை... யதுநந்தனிற்கும் பவதாரிணிக்கும்...
பின்னே வந்த வாகனங்கள் தொடர்ந்து ஹாரன் அடிக்கும் சத்தத்தில் கண்களை விழித்துக் கொண்டவன், காரை எடுத்துக் கொண்டு செல்ல, பவதாரிணியோ இன்னும் கண்களை மூடிய நிலை தான்.
அவளை உணர்வின்றி பார்த்தவன், காரை நேராக ஒரு பார்க்கில் நிறுத்தினான்.
"தாரணி, தாரணி" என்று அவன் எழுப்ப, அவள் கண்களைத் திறக்கவில்லை. அதனால் அவளின் தோளைத் தொட்டு உலுக்கினான் யதுநந்தன்.
சட்டென்று கண்களைத் திறந்தவள், அவனின் தொடுகையில் திடுக்கிட்டு பின்னே நகர்ந்தாள்.
அதைக் கண்டவனின் முகமோ இறுகியது. "உன்னை கூப்பிட்டேன் நீ எழுந்திருக்கலை... அதனால் தான் தொட்டேன் மத்தபடி உன்னைத் தொடணும்னு ஆசைப்பட்டு பண்ணலை" என்று அழுத்தமாகக் கூறினான்.
"நான் எதுவும் கேட்கலையே... அப்புறம் ஏன் இப்படி ஒரு விளக்கம். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்குமாம்" என்று அழுத்திக் கூறினாள் பவதாரிணி.
"ஏய்! நிறுத்து டி... விட்டால் ஓவரா பேசிட்டே போற...அன்னிக்கு நான் பண்ணினது பெரிய தப்பு தான். அதுக்காக என்னை குத்தி குத்தி பேசி காயப்படுத்தலாம்னு நினைக்காத... விளைவு உனக்கு தான் அதிகம் தாரிணி" என்றான் உறுதியாக.
"தாரிணின்னு என்னை நீங்க கூப்பிடுற உரிமை நான் உங்களுக்கு கொடுக்கலை" என்றாள் தீர்மானமாக.
"கூப்பிடத் தானே பெயர் வைச்சிருக்காங்க உனக்கு! லுக் தாரிணி... அன்னிக்கு நடந்த விஷயம் இப்போ வரைக்கும் ஐ ஃபீல் கில்ட்டி" என்று யதுநந்தன் கூறிக்கொண்டிருக்கும்போதே,
"சோ கில்ட்டியா நீங்க இருந்தால் மட்டும்... நடந்தது இல்லைன்னு ஆயிடுமா? இல்லன்னா என் மனசுல மூளையில இருந்து அந்த விஷயத்தை அழிக்க முடியுமா!" என்று அவள் கேட்க,
"உன் கேள்விகள் எல்லாத்துக்கும் நான் பதில் சொன்னாலும் நீ என் மேல வைச்சிருக்க அந்த அபிப்ராயம் மாறப்போறது இல்லை" என்று உணர்வின்றி கூறினான் யதுநந்தன்.
"எஸ்... கண்டிப்பா! நான் உங்களை வெறுக்குறேன்... உங்களைப் பார்த்தாலே அருவருப்பா இருக்கு" என்று யதுநந்தனைப் பார்த்து கத்தினாள் பவதாரிணி.
அதைக் கேட்டவனுக்கோ நமட்டு சிரிப்பு தான். பள்ளியில், கல்லூரியில் இவன் பின் எத்தனை பெண்கள் சுற்றினார்கள். ஏன் இப்போது கூட ரேஷ்மி இவனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறாளே! பவதாரிணி எதனால் இவ்வாறு குறிப்பிடுகிறாள் என அவனுக்குத் தெரியும் ஆனாலும் அவனால் அவள் கூறியதைக் கேட்டு இலகுவாக இருக்க முடியவில்லை.
"என்னைப் பார்த்தால் அருவருப்பா இருக்கா! குட் ஜோக்... உனக்கு பொறாமை... ஆள் ஆறடியில ஃபேரா ரிச்சா ஹீரோ மாதிரி இருக்கான்னு" என்று அவளைப் பார்த்து சீண்டலுடன் கூறினான் யதுநந்தன்.
"வாட்... நான் உங்கள் மேல பொறாமையா! சில்லி" என்று பதிலடி கொடுத்தாள்.
"ஓ அப்போ பொறாமை இல்லைன்னா... பயம்..." என்று விடாமல் கூறினான் யதுநந்தன்.
"பயமா...நீங்க என்ன பிசாசா இல்லை பூதமா உங்களைப் பார்த்து பயப்பட?" என்று திமிராகக் கேட்டாள் பவதாரிணி.
கருத்துகள்
கருத்துரையிடுக