மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...
"ஒன்னும் இல்லை விடு... அவங்க வர இன்னும் ரெண்டு மணி நேரம் மேல ஆகும். சோ என் வாயைக் கிளராமல் இரு அதான் உனக்கு நல்லது" என்று முடித்தவனை, முறைத்தவள் அவனுக்கு பதில் அளிக்காது தன் ஃபோனை எடுத்து ஒரு எண்ணிற்கு கால் செய்தாள்.
"ஹலோ திவாகர்... யா பவதாரிணியே தான் பேசுறேன்... எப்படி இருக்கீங்க?" என்று புன்னகையுடன் நலம் விசாரிக்க, தன் இடத்தில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த யதுநந்தனின் செவியில் அனைத்தும் விழுந்தது தான்.
அச்சம்மாவின் நிலையை ஃபோனில் பேசிய அந்நபரிடம் பவதாரிணி எடுத்துரைக்க, 'ஓ இவன் தான் அந்த டாக்டர் போல' என்றவாறு மனதில் நினைத்தான் யதுநந்தன்.
"ஓகே திவாகர்! நான் உங்களுக்கு அட்ரெஸ் வாட்ஸ் அப் பண்ணிடுறேன்... தாங்க் யூ சோ மச்" என்று கால்லை துண்டித்தாள்.
இருவரும் அதன் பின்னர் எதுவும் பேசவில்லை. படம் பார்த்து முடித்து விட்டு சுஜித் மற்றும் பிரியா வர, இவர்களின் பயணம் வீட்டை நோக்கித் துவங்கியது.
அடுத்த நாள் காலை, திவாகர் அச்சம்மாவைப் பார்க்க வந்தான். முதலில் இதற்கு பிடி கொடுக்காத யதுநந்தன், டாக்டர் என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்போம் என விட்டுப் பிடித்தான்.
அச்சம்மாவின் கால்களை நன்கு பரிசோதித்த திவாகர், அங்கு குழுமியிருந்த வீட்டினரிடம் பொதுப்படையாக, "இவங்களுக்கு பிசியோதெரபி கொடுக்க சொல்லி இருப்பாங்களே?" என்று யோசனையுடன் புருவத்தை சுருக்கினான்.
"ஆமா டாக்டர்... ஆனால் அச்சம்மா கண்டிப்பா பிசியோதெரபி வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என்று மார்புக்கு குறுக்கே தன் கைகளை கட்டியபடி பதில் அளித்தான் யதுநந்தன்.
"ஏன்ம்மா... ஏன் நீங்க பிசியோதெரபிக்கு ஒத்துக்கலை?" என்று அச்சம்மாவிடம் பொறுமையாகக் கேட்டான் திவாகர்.
"எனக்கு கரண்ட்ன்னா பயம் டாக்டர் தம்பி. அதுக்கு காலம் பூரா படுக்கையிலேயே கிடந்திடுவேன்" என்று விரக்தியாகக் கூறினார் பாட்டி.
அதைக் கேட்ட திவாகரோ, அங்கு நின்றிருந்த பவதாரிணியைக் கேள்வியாக நோக்க, அதை கவனித்த யதுநந்தன், "அவங்களுக்கு கரென்ட்னாலே அலர்ஜி டாக்டர்... பயம்னு கூட சொல்லலாம்... அவங்களுடைய கணவன் என் தாத்தா ஷாக் அடிச்சு தான் இறந்துப்போனாங்க. அதனால தான்" என்று உண்மையை உடைத்தான் யதுநந்தன். இவ்விஷயம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
"திவாகர்... எப்படியாவது அச்சம்மா பழைய மாதிரி நடக்கணும்" என்று கவலையுடன் கூறினாள் பவதாரிணி.
"பிசியோதெரபி ரெகுலரா பண்ணினால் அவங்க ஆறு மாசத்துல பழைய மாதிரி பக்காவா நடப்பாங்க பவதாரிணி... ஆனால் அவங்க கண்டிப்பா பிசியோதெரபி பண்ணனும்" என்று முடித்தான் திவாகர்.
வேகமாக பாட்டியின் பக்கத்தில் கட்டிலில் அமர்ந்த பவதாரிணி, "அச்சம்மா! நான் உங்க கூடவே இருக்கேன்... பிசியோதெரபி ஒன்னுமே இல்லை அச்சம்மா... பயப்புடாமல் ஒத்துக்கோங்க" என்று அவரின் கரத்தை மென்மையாக பற்றினாள் பவதாரிணி.
'நான் சொல்லியே அச்சம்மா கேட்கலை... இவள் சொல்லியா கேட்கப் போறாங்க' என்று மனதில் சலிப்பாக நினைத்தான் யதுநந்தன்.
ரொம்ப நேரமாக அமைதியாக இருந்த அச்சம்மா,"நான் இந்த பிசியோதெரபி ட்ரீட்மென்ட்க்கு சம்மதிக்குறேன் ஆனால்" என்று அவர் இழுக்க,
அனைவருக்கும் இதில் பேரதிர்ச்சி கலந்த சந்தோஷம்.
"அச்சம்மா! ஆனால் என்ன... என்னனாலும் ஓகே!" என்று அவர் சம்மதித்த உற்சாகத்துடன் கூறினாள் பவதாரிணி.
யதுந்தனிற்கும் அச்சம்மா சம்மதித்ததில் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் தான் ஆனாலும் அச்சம்மா ஏதோ மனதில் வைத்திருக்கிறார் என்று யூகித்து அமைதியாக புருவத்தைச் சுருக்கினான்.
"நான் என்ன சொன்னாலும் எல்லாரும் கண்டிப்பா செய்வீங்களா?" என்று அனைவரையும் பொதுப்படையாகப் பார்த்துக்கொண்டே கேட்டார் அச்சம்மா.
"என்ன சொன்னாலும் செய்வோம்" என்று எல்லாரும் வாக்கு கொடுக்க,
'அச்சம்மா ஏதோ முடிவோட தான் இருக்காங்க' என்று மனதினில் யூகித்திருந்த யதுநந்தன்,"பண்றோம் அச்சம்மா" என்று யோசனையுடன் கூறிக்கொண்டிருக்கும் போதே,
"ஆமா அச்சம்மா... கண்டிப்பா செய்றோம்" என்று வேகத்துடன் கூற,
"சுஜித் பிரியா கல்யாணம் அன்னிக்கு நம்ம யதுநந்தனுக்கும், நம்ம பவதாரிணிக்கும் கல்யாணம் நடக்கணும்" என்று அச்சம்மா நிறுத்தி நிதானமாக தெளிவாக கூறி முடிக்க, இங்கு பவதாரிணிக்கோ உலகமே சுற்றியது.
பெரியவர்களுக்கும் இது அதிர்ச்சி தான் என்றாலும், நல்ல விஷயம் தானே என அமைதி காத்தனர். பிள்ளைகளின் முடிவிற்காக!
"யதுநந்தனுக்கும் பவதாரிணிக்கும் கல்யாணம் நடந்த அப்புறம் தான் நான் இந்த ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்குவேன். அப்படி அவங்க ரெண்டு பேரும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா கடைசி வரைக்கும் படுத்த மாதிரியே கட்டையில போயிடுறேன்" என்று முடிவாகக் கூற,
"அத்தை" என்று அம்பிகா அலற,
"அம்மா" என்று அகல்யா கதறினாள்.
"இது பிள்ளைங்க வாழ்க்கை இல்லையாம்மா! நம்ம முடிவை எப்படி அவங்க கிட்ட திணிக்குறது... இதுல ரேகாவுடைய பொண்ணு ரேஷ்மியை யதுநந்தனுக்குன்னு சின்ன வயசுலயே பேசி வைச்சிருக்கோம்" என்று தடுமாறினார் மாதவன்.
"இது தான் என் முடிவு மாதவா... இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா நானும் ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்குறேன்" என்று தீர்மானமாக கூறினார் அச்சம்மா.
"முத்து நீ என்ன டா சொல்ற?" என்று மாதவன் நண்பனைக் கேட்க,
"யது மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாங்க ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும் மாதவா" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் முத்துவேல்.
"ஆமா அண்ணா! யது மாப்பிள்ளையா கிடைக்குறதே எங்களுடைய பாக்கியம்" என்று அகல்யா சந்தோஷப்பட,
"அம்மா" என்று பற்களைக் கடித்தாள் பவதாரிணி.
"என்ன அம்பிகா... என் மருமகள் மாதிரி அழகா லட்சணமா நல்ல பண்புள்ள ஒரு பொண்ணு கிடைக்க எங்க யது ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும்" என்று அம்பிகா மெச்ச, யதுநந்தனோ சிலையாக உரைந்து நின்றிருந்தான்.
"அச்சம்மா! இதைத் தவிர என்ன வேணாலும் சொல்லுங்க ப்ளிஸ்" என்று கலங்கிய விழிகளுடன் கெஞ்சினாள் பவதாரிணி.
"அப்போ நீங்க கிளம்புங்க டாக்டர்.. வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்று முடித்து கண்களை மூடினார்.
"அச்சம்மா" என்று பவதாரிணி ரொம்ப நேரம் கெஞ்ச, பெரியவர்களோ இது சின்னவர்களின் வாழ்க்கை அவர்களே தீர்மாணிக்கட்டும் என்று அமைதி காத்தபடி விலகினர்.
திவாகரும் விடைப்பெற்று சென்று விட, அன்றைய மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது.
மழையை வெறுமையாக பார்த்தபடி அப்பெரிய வீட்டில் ஜன்னலின் பக்கம் வெறித்துக் கொண்டு இருந்த பவதாரிணியின் கண்களில் கண்ணீர்.
கருத்துகள்
கருத்துரையிடுக