முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 5

மழை 5

"பவா" என்று அழைத்தபடி தங்கையின் தோளில் கைவைத்தாள் பிரியா.


"சொல்லு பிரியா" என்று தன் தமக்கை பார்க்காத வண்ணம், குனிந்து கண்களை வேகமாகத் துடைத்துக் கொண்ட பவதாரிணி,


"ஏன் டி சாப்பிடாமல் இருக்க?" என்று அக்கறையுடன் கேட்டாள் பிரியா. 


"நீங்க யாரும் என்கிட்ட பேசாமல் இருக்கீங்க! அதனால தான் சாப்பிடலை" என்று வெறுமையுடன் கூறினாள் பவதாரிணி. 


"உன் கிட்ட பேசக் கூடாதுன்னு இல்லை பவா, உனக்கு தனிமை கொடுக்க நினைச்சோம்."


"தனிமையா! எதுக்கு?"


"வந்து... அச்சம்மா சொன்ன விஷயத்தைப் பத்தி யோசிப்பணு" என்று தயங்கி தயங்கி கூறினாள் பிரியா. 


"அந்த விஷயத்துக்குத் தான் நான் அப்போவே ஃபுல் ஸ்டாப் வைச்சிட்டேனே கா" என்று சலிப்பாக இழுத்தாள் பவதாரிணி. 


"ஏன் பவா உனக்கு யதுவை பிடிக்கலை? நல்லா படிச்சிருக்கான், சொந்தமா பிசினஸ் பண்றான், ஆளு வேற பார்க்க ஹீரோ மாதிரி இருக்கான்" என்று பிரியா கூறிக்கொண்டிருக்கும்போதே, 


"அப்போ அவனுக்கு தகுந்த மாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்க... என்னை விட்டுடுங்க" என்று கூறி முடிக்கும் போதே, அவளின் இதயத்தில் ஒரு வலி படர்ந்தது. 


"லூசு! உனக்கு மட்டும் என்ன குறைச்சல்... நீயும் அழகி தான்.இன்ஃபக்ட் நீ கிடைக்க அவன் கொடுத்து தான் வைச்சிருக்கணும் பவா" என்று பிரியா அறிவுறுத்தினாள். 


"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை பிரியா... ப்ளிஸ் நீயாவது புரிஞ்சிக்கோ. மத்தவங்களையும் கன்வின்ஸ் பண்ணு" என்று முடித்தாள் பவதாரிணி. 


"மத்தவங்க யாரும் கன்வின்ஸ் ஆகணும்னு அவசியம் இல்லை பவா... ஏன்னா இது உன் வாழ்க்கை டி... ஆனால் அச்சம்மா தான் காலையில இருந்து சாப்பிடாமல் இருக்காங்க" என்று கவலையுடன் கூறினாள் பிரியா. 


"அச்சம்மா...சாப்பிடலையா... அதுவும் காலையில இருந்தா! ஏன் என்ன ஆச்சு?" என்று பதறினாள் பவதாரிணி. 


ஏனெனில் காலையில் அச்சம்பவம் பின்னர் பவதாரிணி அச்சம்மாவைக் காணவில்லை. அவளுக்கு அவரை எதிர்க்கொள்ள பயம். தனக்கு மிகவும் பிடித்த அச்சம்மாவிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு வேண்டாமென வந்திருக்கிறாளே! 


"நீ சரி சொல்லலைன்னு அவங்க சாப்பிடலை டி" என்று கவலையுடன் கூறினாள் பிரியா. 


"அக்கா! நான் போய் பேசிப் பார்க்குறேன்" என்று வேகமாக அச்சம்மாவின் அறைக்குள் செல்ல, அங்கு ஏற்கனவே சாப்பாடு தட்டுடன் யதுநந்தனும் அம்பிகாவும் அச்சம்மாவிடம் போராடிக் கொண்டு இருந்தனர். 


"அச்சம்மா ப்ளிஸ் சாப்பிடுங்க" என்று பவதாரிணி கெஞ்ச, அத்தனை நேரம் அச்சம்மாவிடம் இருந்த யதுநந்தனின் பார்வை இப்போது  பவதாரிணியின் மீது கேள்வியாக... அழுத்தமாக... 


அப்பார்வையை உணர்ந்த பவதாரிணியோ, அதனை கண்டுக்கொள்ளாது அச்சம்மாவிடம், "அச்சம்மா நான் சொன்னா கேட்க மாட்டீங்களா?" என்று மீண்டும் கெஞ்சினாள். 


"நான் சொன்னதை நீங்க ரெண்டு பேரும் கேட்டீங்கன்னா... நான் சாப்பிடுறேன்...இல்லைன்னா பட்டினி கிடந்து சாகுறேன்" என்று விட்டேரியாக கூறினார் அச்சம்மா. 


"அச்சம்மா... என்ன பேச்சு இதெல்லாம்" என்று கோபத்துடன் ஆதங்கப்பட்ட யதுநந்தன்,"எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்... அதனால எனக்காக சாப்பிடுங்க" என்று அவரிற்கு ஊட்டி விட முனைந்தான். 


அதைக் கேட்ட பவதாரிணியோ அசைவற்று நின்றாள்... அவளால் இதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. ஒருவேளை நான் காண்பது ஒரு கனவாக இருக்குமோ என்று கூட நினைத்தாள். 


"இல்லை குட்டா... மாப்பிள்ளை மட்டும் சம்மதிச்சா போதுமா... பொண்ணும் சம்மதிக்கணுமே! அப்போ தான் இந்த அச்சம்மா தொண்டையில சாப்பாடு இறங்கும். அதுவரைக்கும் பச்ச தண்ணீ கூட இறங்காது" என்று உறுதியாக இருப்பவரை மாற்ற முடியாது தவித்த பவதாரிணி எவ்வளவு நேரம் அப்படியே அசையாது நின்றாளோ, அச்சம்மாவின் நிலை எண்ணி ரொம்பவே பயந்தவள், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு... 


"நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்குறேன்" என்று கீழே குனிந்த படி கண்ணீரை உள்வாங்கிக் கொண்டு கூறினாள். 


****


கல்யாண நாளன்று வீடே கோலாகலமாக இருந்தது. பின்னே இரண்டு கல்யாணம் நடக்கவிருக்கிறது அல்லவா! 


கோல்டன் வண்ண கேரளா சேலையில் பிரியா மின்ன, பவதாரிணி பேரழகியாக ஜொலித்தாள்.



தங்க நகைகள் நெஞ்சில் ஊஞ்சல் ஆட, அடர்த்தியான நீண்ட கூந்தலை அணைத்து முத்தமிட்டது... மல்லிப்பூச்சரம்! 


தங்களுடைய வருங்கால மருமகள்களை காண மாதவன் வீட்டில் கண் கோடி வேண்டினர். சொந்தங்கள், உற்றார்,உறவினர்களிடம் அத்தனை பெருமையாகக் தங்கள் மருமகள்களை அறிமுகம் படுத்தி வைத்தனர். 


அன்று பவதாரிணி சம்மதம் கூறினாள் தான்... வேறு வழியில்லாமல்... பாட்டிக்காக... பாட்டியின் நலனுக்காக...பாட்டியின் பிடிவாதத்திற்காக.... 


சம்மதம் கூறியவள் அதற்கு பின் தலை நிமிந்து யதுநந்தனைப் பார்க்கவே இல்லை.ஆனால் யதுநந்தனோ பவதாரிணி சம்மதம் கூறிய பின்னர் அவளைத் தான் அடிக்கடி பார்த்தான்... சில சமயம் கேள்வியாக, சில சமயம் அவனின் கேள்விக்கான விடையை நோக்கி, சில சமயம் ஆழமாக, சில சமயம் ஆர்வமாக... 


வேஸ்டி சட்டையில் தமிழ் முறைப்படி மாப்பிள்ளைகள் தயாராகி இருக்க, பவதாரிணி யிடம் கேட்க நினைத்த, பேச துடித்த அவ்வார்த்தைகளை அவளின் கண்களைப் பார்த்து கேட்க துடித்தவனுக்கு நேரமும் அமையவில்லை... சமையமும் சமயவில்லை... தனிமையும் கிடைக்கவில்லை... பவதாரிணி அவனின் கண்களிலும் படவில்லை. 


அவனிடம் கண்ணாம்மூச்சி ஆட்டம் தான் காட்டினாள் காரிகை. 


'கடவுளே! எப்படி அவனோட இனி ஒரே வீட்ல... ஒரே ரூம்ல... ரொம்ப பயமா இருக்கே' என்று மனதில் நினைத்தவளுக்கு இதயம் எக்குத்தப்பாக துடித்தது. 


தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த பவதாரிணியை அழைக்க நினைத்தவன், அவளின் செல் எண்ணிற்கு கால் செய்தான் முதன் முறையாக... 


"ஏய்! பவா உன் ஃபோன் அடிக்குது பாரு" என்று எடுத்துக் கொடுத்தாள் அவளின் தோழி பிரபா. 


திடீர் திருமணம் என்பதால் பிரபா மட்டும் வந்திருந்தாள். கூடவே அவளின் அண்ணன் திவாகரும். 


"யாரு இது புது நம்பரா இருக்கே!" என்று முணுமுணுத்தபடியே இருந்தவள், கால்லை எடுக்கவில்லை. 


ஜன்னல் வழியாக மழையைத் தான் வெறித்துக் கொண்டிருந்தாள்... யதுநந்தன் மீது பயத்துடன்... அவனுடன் தனக்கான வருங்காலத்தைப் பற்றி எண்ணும் போதே வயிற்றில் புளியைக் கரைத்தது. 


கேரளாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும்  நேரியமங்கலம் பகுதி அதிக சராசரி மழையைப் பெறும் என்று இருக்கையில் அது மழைக் காலம் வேறு... 


மழையை வெறித்தாலும் மனமெங்கும் பழைய நினைவுகள் மட்டுமே! 


மறுபடியும் அவளின் ஃபோன் ஒலித்தது. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் பனியா முதல் மழையா! 1

  மழை 1 கேரளாவில் உள்ள நேரியமங்கலத்தில் அமைந்திருந்த விஷ்வம் விலாஸ் கலகலவென காணப்பட்டது. ஏனெனில் இன்று அவ்வீட்டு இளைய தலைமுறையினரில் மூத்தவனான சுஜித்திற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம். பிரியாவின் தந்தை முத்துவேலும், சுஜித்தின் தந்தை மாதவன் நாயரும் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நண்பர்கள். ஆம், இருவரும் கல்ப்பாக்கம் அனுமின் நிலையத்தில்  வேலைப்  பார்த்தனர். மாதவன் ஓய்வு பெற்றப் பின்னர் தன் சொந்த ஊருக்கான கேரளாவிற்கு வர, முத்துவேலும் ஓய்வு பெற்றப் பின்னர் சென்னையில் சொந்த வீட்டை வாங்கி குடிபெயர்ந்து விட்டார். பிரியா சென்னையில் ஒரு வங்கியில் ஆபிஸராக பணிபுரிகிறாள். சுஜித் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறான். இது ஒரு காதல் திருமணம். அதுவும் பெற்றோர்களால் சந்தோஷமா ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெற இருக்கும் திருமணம். இன்னும் பத்து நாளில் திருமணம் என்று இருக்கையில், இன்று மாப்பிள்ளை வீட்டு முறையுடன் நிச்சயம் முடிந்திருந்தது. "கிருஷ்ணா! பந்தியைப் பாரு" என்று தன் நண்பனை ஏவியபடி தான் உடுத்தியிருந்த வேஷ்டியை இடுப்பிற்கு மேலே வீரமாக கட்டிக்கொண்...

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 2

  மழை 2 அங்கே பக்கத்திலேயே ஒரு அழகான வீட்டை பெண் வீட்டாரிற்காக பார்த்திருந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர். பிரியா மற்றும் சுஜித் நிச்சயம் முடிந்த பின்னர் அங்கே ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு சாப்பிடச் செல்ல முடிவு செய்தனர்.  "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா போக வேண்டாம் சுஜித்" என்று கூறிய அம்பிகா, "பவதாரிணியைக் கூட்டிட்டு போங்க" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.  "ச்ச... சினிமாக்கு போய் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தால் பவதாரிணியை கூட அனுப்புறாங்களே!" என்று சலித்துக் கொண்டவன்... உடனே,"அவளும் வரட்டும் பிரியா! அங்க தியேட்டர் பக்கத்துலயே ஒரு மால் இருக்கு... அங்க அவளை இருக்க சொல்லிடலாம்" என்று உற்சாகமாகக் கூறினான் சுஜித்.  "தெரியாத ஊர்... தெரியாத பாஷை... அவள் எப்படி தனியா இருப்பா சுஜித்" என்று தங்கையின் மேல் அக்கறை கொண்டு கடுகடுத்தாள் பிரியா. "ரிலாக்ஸ் பிரியா... நம்ம யதுவையும் கூட்டிட்டு போயிடலாம். அவன் அவளுக்கு துணைக்கு இருப்பான்" என்று ஐடியா வந்தவனாக கூறினான் சுஜித். "சூப்பர் நல்ல ஐடியா தான்... சரி இரு நான் முதல்ல பவ...