முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 6


மழை 6

 "என்ன இது ஃபோன் வந்துட்டே இருக்கு?" என்று முணுமுணுத்தபடியே கால்லை எடுத்தாள் பவதாரிணி.


"ஹலோ" என்று பவதாரிணி சோர்வுடன் கூற,

"ஹலோ.... நந்தன்" என்று கம்பீரமாக ஒலித்தது அவனின் குரல்.

அதைக் கேட்ட நொடி பெண்ணவளின் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது. கைகள் கூட லேசான நடுக்கம் எடுத்தது. 

"தாரிணி!" என்று மறுப்பக்கம் மென்மையாக ஒலித்தது அவனின் குரல். அது பெண்ணவளை இன்னும் உறையச் செய்தது. 

"ஏய் என்ன டி ஃபோனை எடுத்துட்டு பேசாமல் இருக்க!" என்று தங்கையை உலுக்கினாள் பிரியா. 

"ஹா... ன்! பேசுறேன் டி" என்று அக்காவிடம் தடுமாறிய பவதாரிணி, "சொல்... லுங்க" என்று திணறினாள். 

"மாடிக்கு வா! உன்கிட்ட பேசணும்" என்று மென்மை கலந்த உரிமையுடன் அழைத்தான் யதுநந்தன். 

"இல்லை... நான்... அது... கல்யாணக்... கோலம்.." என்று வார்த்தையை கோர்க்க முடியாமல் தடுமாறிக் கொண்டே இருந்தாள் மங்கை. 

"கல்யாண மாப்பிள்ளை நானே கூப்பிடுறேன்! மேலே வா... நீ வரலைன்னா நான் வந்திடுவேன்" என்று விஷமக் புன்னகையுடன் அவன் கூற, 'இவன் சிடுசிடுன்னு முகத்தை வைச்சிருந்தால் கூட பரவாயில்லை ஆனால் இப்படி இனிமையா பேசுறது ரொம்ப பயமா இருக்கு கடவுளே!' என்று மனதிற்குள் பயந்தவள், 

" இல்... லை! அது வந்து மழை" என்று மலங்க விரித்தாள் பவதாரிணி. 

"மழை... ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம் தானே! நான் மாடிக்கு பக்கத்துல இருக்குற ரூம்ல தான் இருக்கேன்" என்று அவன் ஆர்வத்துடன் கூற, இவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. இத்தனை நேரம் இருந்த தடுமாற்றத்தில் இருந்து வெளியே வந்தவள், அவனிடம் எதுவும் பேசாமலேயே ஃபோனை கட் செய்து விட்டாள். 

மழையை ரசித்துக் கொண்டே அவளிடம் பேசிக் கொண்டிருந்தவனுக்கு முகத்தில் அடித்தாற் போல் இருந்தது... அவள் ஃபோனைச் சொல்லாமல், இவனை மதிக்காமல் துண்டித்தது... கோபம் வந்தது தான் ஆனாலும் அடக்கிக் கொண்டான். 

மூகூர்த்த நேரம் கூட, நால்வரும் மாப்பிள்ளையும் பொண்ணுமாய் அந்த பெரிய வீட்டில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமர்ந்தனர். 

பிரியா மற்றும் சுஜித் மனமெங்கும் புன்னகையுடன் ஒளிர, 

இங்கே பவதாரிணிக்கோ கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது என்றால் யதுநந்தனிற்கும் மனதில் என்ன இருக்கிறது என்று யாராலும் அறிய முடியவில்லை. அப்படி ஒரு முக பாவனை அவனிடம்! 

தங்கத் தாலியை மாப்பிள்ளை இருவரும் மணப்பெண்ணின் கழுத்தில் அணிவித்து தங்களின் திருமணத்தை இனிதே முடித்தனர். 

'யாரை இனி வாழ்க்கையில் பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேனோ இனி அவனோடு என் வாழ்க்கை' என்று கண்ணீர் சுரக்க நினைத்த பவதாரிணியின் மனதில் அத்தனை ஒரு வலி. 

சடங்குகள் எல்லாமே முடிந்து பெரியவர்கள் ஆசி பெற்று வந்திருந்த உற்றம், சுற்றத்திடம் ஆசி பெற்று சாப்பிடும் போது கூட... யதுநந்தனும் பவதாரிணியும் பேசிக்கொள்ளவில்லை. 

தன் பேரன்கள், பேத்திகள் கல்யாணத்தை மகிழ்ச்சியுடன் கண்டுக் கொண்டிருந்தார் அச்சம்மா.

அன்றிரவு வரை யதுநந்தனின் கண்ணில் பவதாரிணி படவில்லை. சுற்றி இருந்த உறவினர்கள் விடை பெற்றிருக்க, குடும்பம் மட்டுமே சூழ்ந்திருந்த நேரத்தில்... 

முதலிரவிற்கு தயாராகினாள் பிரியா. "பிரியா, பவதாரிணியையும் அப்படியே கிளப்பிடு டி... எனக்கு அவள் கிட்ட பேசவே பயமா இருக்கு... உர்ருன்னு உட்கார்ந்திட்டு இருக்காள்" என்று கவலையுடன் கூறினார் அகல்யா. 

"அவள் சம்மதிச்சு தானேம்மா இந்த கல்யாணம் நடந்துச்சு! நம்ம ஒன்னும் ஃபோர்ஸ் பண்ணலை... அதனால நீங்க கவலைப்படாமல் இருங்க" என்று தாயைத் தேற்றினாள் பிரியா. 

"அவள் சம்மதிச்சாள் தான் ஆனால் சூழ்நிலை கைதி போல் நம்ம ஆக்கிட்டோம் அந்த குற்றுஉணர்வு எனக்கு இப்போ வருது பிரியா... அவள் இன்னிக்கு காலையில இருந்து உம்முன்னே இருக்கா" என்று கலங்கினார். 

"அம்மா! இப்போ பாருங்க... நான் அவளை கிளப்பி கூட்டிட்டு வரேன்... உங்கள் அழகு மகள் தேவதையா ஜொலிக்கப் போறாள்... நீங்களே சந்தோஷப் படப்போறீங்க" என்று சமாளித்தவள், தங்கை இருந்த அறைக்குச் சென்றாள். 

இரவு விளக்கில் பச்சை வண்ண சுடிதாரில்  காலை குறுக்கிக்கொண்டு, அதில் கையை கோர்த்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள் பவதாரிணி. 

"இன்னும் எவ்வளவு நேரம் டி இப்படியே இருட்டுல உட்கார்ந்துட்டு இருக்கப் போற!" என்று அக்காவின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பவதாரிணி. 

"அக்கா... என்ன ஆச்சுக்கா?" என்று பதற்றத்துடன் கேட்டாள் தங்கை. 

"முதலிரவுக்கு கிளம்பாமல் உர்ருன்னு இருக்கனு அம்மா ரொம்ப ஃபீல் பண்ணி அழறாங்க டி... எங்க எல்லாருக்கும் உன் நிலை புரியுது! அதான் சுஜித் வீட்டுல கூட உன்னை தொந்தரவு செய்யாமல் இருக்காங்க. அதுக்காக இப்படியே இருக்குறது எந்த விதத்துல நியாயம் டி" என்று தங்கையின் கையை ஆறுதலாக வருடியபடியே கேட்டாள் பிரியா. 

'இன்னும் எத்தனை நாள் இப்படி ஓடி ஒளிய முடியும். கண்டிப்பா ஒரு நாள் அவனை ஃபேஸ் பண்ணித் தான் ஆகணும். நம்ம சுயமா தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம். அதனால மத்தவங்களை சங்கடப் படுத்த கூடாது' என்று நினைத்தவள் ஒரு முடிவு எடுத்தவளாக எழுந்து, 

"இப்போ நான் என்ன பண்ணனும் பிரியா" 

"போய் ஃபிரெஷ் ஆயிட்டு வா... முதல் ராத்திரிக்கு உன்னை ரெடி பண்ணனும்" என்று கூறினாள் அக்கா. 

"சரி டி" என்று எழுந்தவள் குளிக்கச் சென்று விட்டாள்.சிம்பிளாக பிங்க் வண்ணத்தில் லினென் சேலை உடுத்தினாள் பவதாரிணி. 

அடுத்த அரை மணி நேரத்தில் தங்கையை எழில் ஓவியமாக தயார் செய்திருந்தாள் பிரியா. 

"அம்மா! பாருங்க உங்க பொண்ணை... ரெடி ஆயிட்டா!" என்று இன்முகத்துடன் தங்கையை அம்மாவிடம் காட்டினாள் பிரியா. 

தன் இரு மகள்களையும் கண்டு மனது பூரித்த அகல்யா, "ரெண்டு பேரும் புருஷன் கூட சந்தோஷமா இருக்கணும் மா! உங்களுக்கு கிடைச்ச புகுந்த வீடு வேற யாருக்குமே கிடைச்சிருக்காது அவ்வளவு நல்ல மனுஷங்க" என்று மகிழ்வுடன் கூறிவிட்டு அவரின் அறைக்குச் சென்று விட்டிருந்தார். 

"நம்மளை ஃப்ரஸ்ட் நைட் ரூம்க்கு அனுப்ப கூட சொந்தம் இல்லை... சரி, அத்தை ரூம்ல எல்லாமே ரெடியா இருக்குன்னு சொன்னாங்க... உனக்கு மாடியில பக்கத்துல இருக்குற ரூம் டி பார்த்து போ" என்று தங்கையிடம் கூறிவிட்டு தன் அறைக்குள் சென்றாள் பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் பனியா முதல் மழையா! 1

  மழை 1 கேரளாவில் உள்ள நேரியமங்கலத்தில் அமைந்திருந்த விஷ்வம் விலாஸ் கலகலவென காணப்பட்டது. ஏனெனில் இன்று அவ்வீட்டு இளைய தலைமுறையினரில் மூத்தவனான சுஜித்திற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம். பிரியாவின் தந்தை முத்துவேலும், சுஜித்தின் தந்தை மாதவன் நாயரும் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நண்பர்கள். ஆம், இருவரும் கல்ப்பாக்கம் அனுமின் நிலையத்தில்  வேலைப்  பார்த்தனர். மாதவன் ஓய்வு பெற்றப் பின்னர் தன் சொந்த ஊருக்கான கேரளாவிற்கு வர, முத்துவேலும் ஓய்வு பெற்றப் பின்னர் சென்னையில் சொந்த வீட்டை வாங்கி குடிபெயர்ந்து விட்டார். பிரியா சென்னையில் ஒரு வங்கியில் ஆபிஸராக பணிபுரிகிறாள். சுஜித் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறான். இது ஒரு காதல் திருமணம். அதுவும் பெற்றோர்களால் சந்தோஷமா ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெற இருக்கும் திருமணம். இன்னும் பத்து நாளில் திருமணம் என்று இருக்கையில், இன்று மாப்பிள்ளை வீட்டு முறையுடன் நிச்சயம் முடிந்திருந்தது. "கிருஷ்ணா! பந்தியைப் பாரு" என்று தன் நண்பனை ஏவியபடி தான் உடுத்தியிருந்த வேஷ்டியை இடுப்பிற்கு மேலே வீரமாக கட்டிக்கொண்...

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 2

  மழை 2 அங்கே பக்கத்திலேயே ஒரு அழகான வீட்டை பெண் வீட்டாரிற்காக பார்த்திருந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர். பிரியா மற்றும் சுஜித் நிச்சயம் முடிந்த பின்னர் அங்கே ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு சாப்பிடச் செல்ல முடிவு செய்தனர்.  "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா போக வேண்டாம் சுஜித்" என்று கூறிய அம்பிகா, "பவதாரிணியைக் கூட்டிட்டு போங்க" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.  "ச்ச... சினிமாக்கு போய் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தால் பவதாரிணியை கூட அனுப்புறாங்களே!" என்று சலித்துக் கொண்டவன்... உடனே,"அவளும் வரட்டும் பிரியா! அங்க தியேட்டர் பக்கத்துலயே ஒரு மால் இருக்கு... அங்க அவளை இருக்க சொல்லிடலாம்" என்று உற்சாகமாகக் கூறினான் சுஜித்.  "தெரியாத ஊர்... தெரியாத பாஷை... அவள் எப்படி தனியா இருப்பா சுஜித்" என்று தங்கையின் மேல் அக்கறை கொண்டு கடுகடுத்தாள் பிரியா. "ரிலாக்ஸ் பிரியா... நம்ம யதுவையும் கூட்டிட்டு போயிடலாம். அவன் அவளுக்கு துணைக்கு இருப்பான்" என்று ஐடியா வந்தவனாக கூறினான் சுஜித். "சூப்பர் நல்ல ஐடியா தான்... சரி இரு நான் முதல்ல பவ...