முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 7

 மழை 7


'ஐய்யோ பெருமாளே! இப்போ நான் கண்டிப்பா ரூமுக்கு போகணுமா... அவன் இருப்பானே! அவன்னா... நான் பயப்படனுமா... நோ நெவர்... அவனையெல்லாம்' என்று மனதிற்குள் கடுகடுத்தவள், மனதில் தைரியத்தை வரவழைத்து அடி மேல் அடியெடுத்து சென்றாள் அவனின் அறைக்கு. 


அவள் மாடிக்கு வரும் போதே சில்லென்று வீசிய காற்று அவளின் வெற்றிடையில் பட்டு சில்லிட, அவளின் மேனியோ மெல்ல நடுங்கத் தான் செய்தது. 

திறந்திருந்த அறையில் நுழையலாமா வேண்டாமா என்று அவளின் மனம் போராட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே, குளிரில் திணறிய அவளின் இடை வளைவும், குளிரில் அவளின் ஜாக்கெட்டை அணைத்துக் கொண்டிருந்த முதுகும் சற்று நடுங்கத் தான் செய்தது. 

அதனின் விளைவால் அவளை மீறி அவளின் பொன் கால்கள் அறைக்குள் சென்றிட, கதவு தாழ்ப்பாள் போடப்படும் சத்தம் கேட்டு, திரும்பி பார்த்தவள்... யதுநந்தன் தாழ்ப்பாள் போடு தைப் பார்த்து அதிர்ந்தாள். 

"ஏய் என்ன பண்ற நீ?" என்று கத்தினாள் பவதாரிணி. 

"கதவைச் சாத்தினேன்... கண்ணு தெரியலையா உனக்கு" என்று அவளை மெல்ல நெருங்கியவன் வேஷ்ட்டி சட்டையில் மின்ன, வெண்ணிறத்தில் இருந்த அவனின் ஆண்மைக் கொண்ட உடலும் வதனமும் பவதாரிணியை அவளையும் மீறி அவனை ரசிக்க வைத்தது என்றால், 

மாநிறத்தில் ஹாட் சாக்லெட் போல் கொள்ளை கொள்ளும் அழகுடன் அவளை ரசித்து திண்று விடும் அளவிற்கு அழகில் வெறியேற்றியவளின் முகம் மற்றம் வளைவு நெளிவுகள் ஆணவனை பித்தம் கொள்ளத் தான் செய்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டான் தன் உணர்வுகளை மொத்தமாக.... 

"இங்கப் பாரு என்னை... ஏதாவது...என்கிட்ட ஏதாவது தப்பா நடக்க முயற்சி பண்ணினீன்னா நான் கத்திடுவேன்... அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என்று பதறியபடி அவள் பின்னே நகர, 

தன் முழுங்கை சட்டையை மடித்துக் கொண்டே பவதாரிணியைக் கண்டு விஷமமாக சிரித்த படி அவளை நோக்கி நகர்ந்தான் யதுநந்தன். 

"ஏய்! நான் சொல்ல சொல்ல ஏன் இப்படி பக்கத்துல வர" என்று பின்னே சென்றவளோ, சுவற்றில் மோதிக்கொண்டு பின்னே நகர இடமின்றி திண்டாட, இங்கு காளையவனோ நங்கையை நெருக்கி தன் இரு கைகளையும் சிறை போல் வைத்து அவளை நகர விடாது பார்த்தான்... முகத்தில் ஆசையுடன்... 

"ஒழுங்கு மரியாதையா போயிடு... இல்லைனா நான் கத்துவேன்" என்று யதுநந்தனின் மூச்சு காற்று தன் மேல் படுவதின் விளைவால் முகத்தை திரும்பியபடி அலறினாள் பவதாரிணி. 

"என்னைப் பாரு பவி... என் கண்ணைப் பாரு" என்று ஆழ்ந்து அழைத்தான் யதுநந்தன். 

அதைக் கேட்ட நங்கையவளின் செவி அதை உள்வாங்குவதற்குள் அவளின் கரு விழிகள் இரண்டும் அவள் மனதையும் மீறி அவனைப் பார்த்தது...ஏக்கத்துடன் ஒன்றிய புரியாத பார்வை அது! 

"நான் உன்னை என்னிக்குமே வலுக்கட்டாயப்படுத்துனது இல்லை... இனியும் அப்படித் தான்... அதுக்காக உன்னைத் தொடாமல் எல்லாம் இருக்க மாட்டேன்.. தொடுவேன்! நிறைய தொடுவேன்... உனக்கு பிடிக்கலைன்னாலும் எனக்கு அது புரிஞ்சிடும்... உனக்கு பிடிக்கும்னாலும் எனக்கு அது தெரிஞ்சிடும்... அப்படி ஒரு பிடித்தம் நீ என் கிட்ட சொல்லாமலே செயலாள உணர்த்தும் அன்னிக்கே நீ எனக்கானவளா முழுசா ஆயிடுவ" என்று அவன் அவள் விழிகளுள் ஊடுறுவி கூற, அவளோ ஸ்தம்பித்து விட்டாள்... உறை பனியாய்! 

அவளின் உறைப்பார்வைக்கு எல்லாம் அலட்டிக் கொள்ளாத சூர்யபார்வையைக் கொண்ட யதுநந்தன் கட்டிலில் படுத்துக் கொண்டு,"ரொம்ப டையர்ட்டா இருப்ப! வந்து தூங்கு டி" என்றான் பாசமாக. 

'இவனுக்குள்ள எத்தனை முகம்... கோபம், திமிரு, கர்வம், அகங்காரம், ஆணவம், பொய், பித்தலாட்டம், துரோகி... இது தான் இவனின் உண்மை' என்று மனதில் நினைத்து நொந்தபடி தரையிலேயே சோர்வாக அமர்ந்தாள் பவதாரிணி. 

அதைக் கண்ட யதுநந்தனோ வேகமாக எழுந்துவிட்டான். 

"பவி! ஏன் வெறும் தரையில உட்கார்ந்து இருக்க... இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி இருக்க" காலை அதட்டலோடு கவலையுடன் கூறினான் யதுநந்தன். 

"ப்ளிஸ்! என்னை பவின்னு கூப்பிடாத..." என்று காதை பொட்டிக் கொண்டாள் பவதாரிணி. 

அதற்குப் பின் ஒரு நொடி கூட தாமதிக்காமல் எழுந்த யதுநந்தன், கீழே வந்து மனைவியின் முன் குனிந்தபடி மண்டியிட்டான். 

"இங்கப் பாரு பவி! உன்னை பவின்னு கூப்பிடுற உரிமை எனக்கு இருக்கு... எனக்கு மட்டும் தான் இருக்கு" என்று உரிமையுடன் கூறினான் யதுநந்தன். 

"உரிமை... என்ன உரிமை உங்களுக்கு? இந்தத் தாலி வெறும் கயிறு மட்டும் தான் எனக்கு... இது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை கல்யாணம்... இதுல உங்களுக்கு உரிமை வேற கேட்குதோ" என்று குத்திக் காட்டினாள் பவதாரிணி. 

"இது உனக்கு வேணும்னா கட்டாயக் கல்யாணம்மா இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை... இந்த உலகத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணோட கல்யாணம் பண்ணிருக்கேன்... இன்னும் உனக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா, என்னை இந்த உலகத்துலயே ரொம்ப ஆழமா காதலிக்குற பொண்ணைத் தான் நான் கல்யாணம் பண்ணிருக்கேன்" என்று கண்களில் ஒளியுடன் கூறியவனை, வெறுமை சிரிப்புடன் பார்த்தாள் பவதாரிணி. 

"காதல்... ஆமா, இந்த உலகத்துலயே நான் உங்களை ரொம்ப ஆழமா காதலிச்சேன் தான்... ஆனால் அந்த காதல் எப்போதோ செத்துப் போச்சு... இப்போ எனக்கு உங்கள் மேல முழு வெறுப்பு மட்டும் தான்... தயவுசெஞ்சு என்னைத் தனியா விடுங்க" என்று அழுகையுடன் கத்தினாள் பவதாரிணி. 

"நீ இப்போ கட்டில்ல வந்து படுத்தால், நான் உன்னை தனியா விடுறேன்... இல்லைனா விட மாட்டேன்" என்று யதுநந்தன் அழுத்தத்துடன் கூற, அவனின் பிடிவாதத்தை நன்கு அறிந்தவள் ஆயிற்றே இவள்! 

வேறு வழியின்றி கண்களைத் துடைத்துக் கொண்டு, கட்டிலிற்கு வேகமாக சென்று ஒரு பக்கமாக படுத்துக் கொண்டாள்.

செல்லும் மனைவியையே குற்ற உணர்வுடன் பார்த்த யதுநந்தன் அவளுக்கு இடையூறு தராமல் கட்டிலில் இன்னொரு பக்கம் ஒரமாக படுத்துக் கொண்டான். 

இருவருக்குமே ஒரு பொட்டு தூக்கம் வரவில்லை. தன் கண்களில் கண்ணீர் சிந்த, சத்தம் வர விடாது வாயைப் பொத்தி அழுதவளின் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் நிறைய கதைகள் சொல்லியது...

கண்களை மூடிய பெண்ணவளின் மனக்கண்ணில் பழைய நினைவுகள் எல்லாம் ரணமாய் தோன்றியது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் பனியா முதல் மழையா! 1

  மழை 1 கேரளாவில் உள்ள நேரியமங்கலத்தில் அமைந்திருந்த விஷ்வம் விலாஸ் கலகலவென காணப்பட்டது. ஏனெனில் இன்று அவ்வீட்டு இளைய தலைமுறையினரில் மூத்தவனான சுஜித்திற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம். பிரியாவின் தந்தை முத்துவேலும், சுஜித்தின் தந்தை மாதவன் நாயரும் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக நண்பர்கள். ஆம், இருவரும் கல்ப்பாக்கம் அனுமின் நிலையத்தில்  வேலைப்  பார்த்தனர். மாதவன் ஓய்வு பெற்றப் பின்னர் தன் சொந்த ஊருக்கான கேரளாவிற்கு வர, முத்துவேலும் ஓய்வு பெற்றப் பின்னர் சென்னையில் சொந்த வீட்டை வாங்கி குடிபெயர்ந்து விட்டார். பிரியா சென்னையில் ஒரு வங்கியில் ஆபிஸராக பணிபுரிகிறாள். சுஜித் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறான். இது ஒரு காதல் திருமணம். அதுவும் பெற்றோர்களால் சந்தோஷமா ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெற இருக்கும் திருமணம். இன்னும் பத்து நாளில் திருமணம் என்று இருக்கையில், இன்று மாப்பிள்ளை வீட்டு முறையுடன் நிச்சயம் முடிந்திருந்தது. "கிருஷ்ணா! பந்தியைப் பாரு" என்று தன் நண்பனை ஏவியபடி தான் உடுத்தியிருந்த வேஷ்டியை இடுப்பிற்கு மேலே வீரமாக கட்டிக்கொண்...

முன் பனியா முதல் மழையா! 12

  மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...

முன் பனியா முதல் மழையா! 2

  மழை 2 அங்கே பக்கத்திலேயே ஒரு அழகான வீட்டை பெண் வீட்டாரிற்காக பார்த்திருந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டினர். பிரியா மற்றும் சுஜித் நிச்சயம் முடிந்த பின்னர் அங்கே ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு சாப்பிடச் செல்ல முடிவு செய்தனர்.  "பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா போக வேண்டாம் சுஜித்" என்று கூறிய அம்பிகா, "பவதாரிணியைக் கூட்டிட்டு போங்க" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.  "ச்ச... சினிமாக்கு போய் கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தால் பவதாரிணியை கூட அனுப்புறாங்களே!" என்று சலித்துக் கொண்டவன்... உடனே,"அவளும் வரட்டும் பிரியா! அங்க தியேட்டர் பக்கத்துலயே ஒரு மால் இருக்கு... அங்க அவளை இருக்க சொல்லிடலாம்" என்று உற்சாகமாகக் கூறினான் சுஜித்.  "தெரியாத ஊர்... தெரியாத பாஷை... அவள் எப்படி தனியா இருப்பா சுஜித்" என்று தங்கையின் மேல் அக்கறை கொண்டு கடுகடுத்தாள் பிரியா. "ரிலாக்ஸ் பிரியா... நம்ம யதுவையும் கூட்டிட்டு போயிடலாம். அவன் அவளுக்கு துணைக்கு இருப்பான்" என்று ஐடியா வந்தவனாக கூறினான் சுஜித். "சூப்பர் நல்ல ஐடியா தான்... சரி இரு நான் முதல்ல பவ...