பவதாரிணி அச்சம்மாவின் பாசத்தில் வளர, இங்கு யதுநந்தனிற்கு தான் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை.
அவனுடைய பன்னிரண்டு வயதில் வீட்டில் ஒரு முறை சண்டையும் போட்டு விட்டிருக்கிறான். ஆனால் அவனை கண்டித்து விட்டார் மாதவன். ஏன் அச்சம்மா கூட யதுநந்தனிடம் அதற்கு பின் ஓரிரண்டு நாட்கள் சரியாக பேசவில்லை.
இதுவரை தனக்கு மட்டுமே அதிகமாய் கிடைத்த அவனுடைய அச்சம்மாவின் மடி, பவதாரிணிக்கும் கொடுக்கப் பட, அப்போது இருந்தே ஒரு இனம் புரியாத வெறுப்பு பவதாரிணியின் மேல்.
தூங்கும் நேரத்தை தவிர்த்து முழுக்க முழுக்க யதுநந்தனின் வீட்டில் தான் வளர்ந்தாள் பவதாரிணி.
"சுஜி" என்று சுஜித்துடன் சந்தோஷமாக விளையாடும் பவதாரிணி, யதுநந்தனின் பக்கம் போனாலே அவன் நகர்ந்து விடுவான். அதனாலே அவனிடம் பேசாமல் இருந்தாள் பவதாரிணி.
ஆனால் பிரியாவுடன் நன்றாகவே பேசுவான் யதுநந்தன். இதை சிறு வயதில் கவனிக்காத கண்டுக்கொள்ளாத பவதாரிணி, பூப்படைந்த பின்னர் தான் உணர்ந்தாள்.
'ஏன் நந்தன் என் கிட்ட பேச மாட்டிங்குறாரு' என்று அவளுடைய பதினாலு வயதில் மூளை கேள்வி எழுப்பியது.
அப்போதெல்லாம் பிரியாவும் சுஜித்தும் நல்ல நண்பர்கள் மட்டுமே. மூவருமே கல்லூரி படிப்பிற்காக சென்னையில் தான் ஹாஸ்டலில் தங்கி என்ஜினீயரிங் படித்தனர்.
சென்னையில் மாதவனின் தங்கை வசுந்தரா வகித்தார். அவரின் வீட்டில் தான் வார இறுதியில் சுஜித்தும், யதுநந்தனும் தங்குவார்கள். கூடவே பிரியாவும் வந்து தங்கினாள்.
வசுந்தராவின் கணவன் சென்ட்ரல் கவர்மென்ட் பணியில் இருந்தார். அவர்களுக்கு ரேஷ்மி என்கிற மகளும் உண்டு.
ரேஷ்மி, யதுநந்தனை விட இரண்டு வருடங்கள் சிறியவள். அவனின் மீது அவளுக்கு ஆசையும் அதிகம். யதுநந்தன் ரேஷ்மியிடம் நன்றாகத் தான் பேசுவான்.
மூவரும் தங்களுடைய கொவட்டர்ஸ்ஸிற்கு சேர்ந்து தான் செல்வார்கள். அந்த முறை ரேஷ்மியும் இவர்களுடன் சேர்ந்து வந்திருந்தாள். ரேஷ்மி பிரியாவிடம் நன்றாக தான் பேசுவாள். அப்படி செல்லும் போது தான் அச்சம்மாவிற்கு எல்லாமுமாய் ஆன அழகில் மிளிர்ந்த பவதாரிணியைக் கண்டான் யதுநந்தன்.
அப்போது பவதாரிணி பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அது யதுநந்தனிற்கு கடைசி வருடம் பொறியியல் படிப்பு. பிரியாவிற்கும் கடைசி வருடம்... சுஜித்தோ எம்பிஅ படித்துக் கொண்டிருந்தான்.
வீட்டில் பேரன்கள் இல்லாததால் இப்போதெல்லாம் அச்சம்மாவுடன் தான் உறங்குகிறாள் பவதாரிணி.
பேரன்களை அதுவும் யதுநந்தனை ரொம்பவே மிஸ் பண்ணிய அச்சம்மா, அந்த மொத்த ஏக்கத்தையும் பாசத்தையும் பவதாரிணியிடம் காட்டி மகிழ்ந்தார்.
யதுநந்தனின் அறையில் பவதாரிணியின் பொருட்கள் இருக்க, அதை கண்டவனுக்கு சற்று முன் அழகில் மிளிர்ந்த பவதாரிணியின் அழகை ஓரந் தள்ளி, அவளின் மேல் கடும் கோபத்தில் இருந்தான்.
"குட்டா! உனக்கு பிடிச்ச இடியாப்பமும், கடலைக் கறியும்" என்று பேரனுக்கு ஊட்டி விட்டார் அச்சம்மா.
"அச்சம்மா! பாத்தீங்களா... உங்கள் பேரன் வந்த உடனே உங்க பேத்தியை மறந்துட்டீங்க" என்று வேகமாக வந்தவள், "எனக்கு ஆ" என்று சாப்பாடு வாங்க வாயைத் திறந்தாள்.
"உனக்கு இல்லாததா குட்டி" என்று பவதாரிணிக்கும் ஊட்டி விட,
'நான் இல்லாத போது தான் என் இடத்தை ஆக்கிரமிச்சிக்குரா... இத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வந்தால் இப்போவும் வந்திடுறாள்... இவளுக்கு இங்கீரம், அறிவு எல்லாம் கொஞ்சம் கூட இல்லையா' என்று அவனால் நினைக்க முடியாமல் இருக்க முடியவில்லை.
அகல்யாவும் வேலைக்குச் சென்றுக் கொண்டு இருந்ததால், தன் பிள்ளை பாதுகாப்பாக இருக்கிறாள் என்று மகளை யதுநந்தன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுக் கொண்டிருப்பதை கண்டுக் கொள்ளவில்லை.
இங்கே யதுநந்தனின் வீட்டிலும் மகள்கள் இல்லாத குறையாக, பவதாரிணியின் வருகையை நினைத்து சந்தோஷத்தில் இருந்தனர் குடும்பத்தினர்.
அதிலும் அம்பிகா பவதாரிணிக்காக ஆசையாக சமைத்து கொடுப்பார்.
ரேஷ்மியோ இங்கே பவதாரிணியை அனைவரும் தூக்கி வைத்து கொண்டாடுவதை நினைத்து மனம் எரிந்தாள்.
'நான் தான் இந்த வீட்டுப் பொண்ணு... ஆனால் இவளை ரொம்ப தலையில தூக்கி வைச்சு ஆடுறாங்க' என்று மனதில் வன்மத்துடன் நினைத்தவளுக்கு ஒரே திருப்தி, யதுநந்தன் பவதாரணியைக் கண்டுக் கொள்ளாமல் இருந்தது தான்.
ஏனெனில் பவதாரிணி கண் கவரும் அழகி. மாநிறம் தான் ஆனாலும் மனதை கொள்ளைக் கொள்ளும் அழகான வதனமும், தேகமும் கொண்டவள்.
"எனக்கு இடியாப்பம் அம்மம்மா" என்று சாப்பாடு மேஜையில் அமர்ந்த ரேஷ்மி, சந்தோஷத்துடன் தன் பாட்டியிடம் பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்த பவதாரிணியை யதுநந்தன் முறைப்பதைக் கண்டாள்.
'ஓ யதுக்கும் இவளைப் பிடிக்காது போல.. ஜாலி' என்று நினைத்தபடி சந்தோஷத்துடன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
இவர்கள் நால்வருக்கும் விடுமுறை ஆனால் இப்போது பவதாரிணிக்கு பதினொன்றாம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் நடந்துக் கொண்டு இருந்தது.
பவதாரிணி படிப்பிலும் செம சுட்டி. டீச்சர் ஆகி குழந்தைகளுடன் குழந்தைகளாய் இருக்க வேண்டும் என்பது அவளின் எண்ணம். அவளின் ஆசையும் கூட...
யதுநந்தன் மற்றும் இளைய தலைமுறையினர் வந்த உடனே, தன் உடைமைகளை எடுத்து வீட்டுக்கு வந்தாலும் பவதாரிணி அங்கேயே தான் இருந்தாள்.
ஏனோ அச்சம்மாவிற்கும் தனக்கும் நீண்ட ஒரு இடைவெளி விட்டது போல் உணர்ந்தான் யதுநந்தன்.
அன்று இரவு வீட்டு மாடியில் அனைவரும் பேசி சிரித்து கொண்டிருக்கையில், அச்சம்மாவின் மடியில் படுத்திருந்த பவதாரிணியோ, "அச்சம்மா! இன்னிக்கு என் பிரண்ட் ஒரு பொண்ணு சொன்னாள்.... நான் உங்க மேல எவ்வளவு பாசமா இருந்தாலும்... கல்யாணம்னு ஒரு பண்ணிட்டு போயிட்டால் உங்களை பிரியணுமாம்... அப்படியா" என்று ஏக்கமாக மடியில் படுத்துக் கொண்டே, கண்களை மட்டும் அச்சம்மாவிடம் காட்டி கேட்டாள் பவதாரிணி.
"ஏய் பவதாரிணி! என்ன பேச்சு இது டி... உனக்கு வயசு பதினாறு தான் ஆகுது... அதுக்குள்ள கல்யாணத்தை பத்தி எல்லாம் பேசுற" என்று அதட்டினார்கள் பவதாரிணியின் தாய் மற்றும் தந்தை.
"அகல்யா... அவள் இன்னும் சின்ன பொண்ணு இல்லை! நிதர்சனத்தை தானே கேட்குறாள்" என்று பவதாரிணிக்கு ஆதரவாக பேசிய அம்பிகா,
"ஆமா பவதாரிணி குட்டி... அது இயற்கை தானே" என்று அவளின் தலையை வருடினார்.
"இல்லை அத்தை... நான் அச்சம்மாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன்" என்று அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் பவதாரிணி. இதைக் கேட்ட அச்சம்மாவிற்கோ கண்களில் சந்தோஷக் கண்ணீர் தேங்கி நின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக