மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...
"எம் பேத்தி" என்று அவர் பவதாரிணியை அள்ளி அணைத்துக் கொண்டார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த அனைவருக்கும் மனதில் அத்தனை நெகிழ்வு என்றால், யதுநந்தனிற்கும் ரேஷ்மிக்கும் அத்தனை கோபம் சுழன்றது. யதுநந்தனின் மனதில்,
'என்னமோ இவளுக்கு சொந்தப் பாட்டி மாதிரி இப்படி ஓவரா உரிமை கொண்டாடுறாள்... இவளுக்கு ஏதாவது பாடம் கத்துக் கொடுத்தே ஆகணும்... ஏற்கனவே என் அச்சம்மா அவளைத் தூக்கி வைக்குறாங்க... இதுல இவள் இந்த மாதிரி எல்லாம் சீன் கிரியேட் பண்ணி என் அச்சம்மாவை முழுசா அவள் பக்கம் இழுத்துட்டு போயிடலாம்னு இருக்காள்! நோ நெவர்... இவளை எல்லாம் இவ்வளவு நாள் சும்மா விட்டு வைச்சதே தப்பு...
இவளுக்கு ஒரு முடிவு கட்டுறேன்' என்று அவன் வன்மம் சூழ்ந்த படி நினைத்தான். ரேஷ்மியோ,'அப்படி என்ன இந்த பவதாரிணி ஸ்பெஷல் இவங்களுக்கு... அவள் இருக்குறதுனால எனக்கு என்னுடைய கவனிப்பு எல்லாம் மிஸ் ஆகுது... இல்லை விடக் கூடாது இந்த கொசுவை அடிச்சு துரத்தியே ஆகணும் ரேஷ்மி... ஆனாலும் நம்ம ஸ்மார்ட்டா பிளே பண்ணனும். இவள் மேல இருக்குற அந்த அபிமானத்தை எடுக்கணும். நம்ம பெயரும் வெளியே வரக் கூடாது' என்று அவள் மனதில் வஞ்சம் சூழ நினைத்துக் கொண்டிருக்கும் போதே, உச்சுக்கொட்டி வேகமாக கீழே சென்ற யதுநந்தனைத் தான் பார்த்தாள். அவள் மட்டும் இல்லை அனைவரும் அவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர். "இவனுக்கு என்ன ஆச்சு?" என்று மாதவன் யோசனையுடன் கேட்க,
"அவனைப் பத்தி தெரியாதா உங்களுக்கு?" என்று சிரித்தே கேட்டார் அகல்யா. "ஏன் அத்தை யதுநந்தன் அத்தானுக்கு ஏதாவது கோபமா என்மேல!" என்று தன் கண்களை உருட்டி கேட்கவும் செய்தாள் பவதாரிணி. தன் மாமியார் இருப்பதை அறிந்து,"ச்ச ச்ச அப்படி எல்லாம் இல்லை குட்டிமா" என்று பவதாரிணியைக் கொஞ்சினார் அம்பிகா. *** நால்வரும் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டு இருக்கும் போது, "யது! நானும் உன்கிட்ட நிறைய தடவை கேட்டுட்டேன் ஆனால் உன் பதில்ல எனக்கு முழுசா நம்பிக்கை வரலை... நீ ஏன் பவா கிட்ட பேசவே மாட்டிங்குற... சின்ன வயசுல தான் பேசுலன்னு நான் ஈஸியா விட்டுட்டேன். ஆனால் நீ பெரியவன் ஆகியும் கூட அவள் கிட்ட பேசாமல் தான் இருக்க... மத்த விஷயத்துல மெச்சூர்ட்டா தானேடா இருக்க... ஆனால் பவா கிட்ட மட்டும் ஏன் பேச மாட்டிங்குற" என்று ஆதங்கத்துடன் தன் தங்கைக்காக கேட்டாள் பிரியா. அதைக் கேட்ட நொடி ரேஷ்மிக்கும் யதுநந்தனிற்கும் முகம் சுருங்க, யது பேச எத்தனிப்பதற்குள்... "அது வந்து பிரி... யது பவா கிட்ட பேசி எல்லாரும் கிண்டல் பண்ணிடுவாங்களோன்னு பயம்! அது... அவனுக்கு முறை பொண்ணு மாதிரி தானே! எனக்கு எப்படி நீ முறை வரியோ அதேப் போல" என்று தன் தம்பியிடம் கண்களால் கெஞ்சியபடி தன் மனதில் இருப்பதையும் மறைமுகமாக பிரியாவிடம் தெரிவிக்க நினைத்தான் சுஜித்.
'உன் போதைக்கு நான் ஊறுகாவா டா' என்று மனதில் தன் அண்ணனை திட்டிய யதுநந்தனிற்கு, சுஜித் பிரியாவை ஒரு தலையாக காதலிப்பது ஏற்கனவே தெரியும் தான். தன் அண்ணனின் காதலுக்காகவும், கெஞ்சலுக்கும் சும்மாவே "ஆமா பிரியா... அதனால தான்" என்று முடித்தான். 'என்னது அந்த பவதாரிணி என் யது அத்தானுக்கு முறைப் பொண்ணா! அப்போ நான் யாரு.. இந்த மாதிரி எல்லாம் வேற பேச்சு போகுதா...இதுக்கு ஒரு முடிவு கட்டணும்' என்று நினைத்தபடி அவள் கிச்சன் புறம் வர, "பேசாமல் நம்ம பவதாரிணியையே யதுநந்தனுக்கு கட்டி வைச்சிடலாமா அத்தை" என்று சமையல் செய்தபடியே தன் மாமியாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அம்பிகா. "ஆமா அம்பிகா... நானும் அதைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.
என் பேத்தியும் என்னை விட்டு போக மாட்டாள்" என்று கண்களில் சந்தோஷத்துடன் கூறினார் லட்சமி. இதைக் கிச்சன் புறம் அவர்களுக்கு தெரியாது ஒட்டுக் கேட்ட ரேஷ்மிக்கோ மனம் அதிர்ந்து விட்டது... வன்மம் இன்னும் கூடியது... 'விட மாட்டேன்... யது என்னுடைய அத்தான் அவரை நான் கண்டிப்பா வேற எவளுக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்... அந்த பவதாரிணியை ஒரு வழி பண்ணியே தீருவேன்' என்று வன்மத்துடன் சபதம் எடுத்தவள்,
ரொம்ப நேரம் தீவிரமாக யோசித்தாள். அன்று இரவு மாடியில் தனது பிளூடூத்தில் பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தான் யதுநந்தன். "அத்தான்" என்றபடி மூக்கு விடக்க, அவனின் முன் வந்து நின்றாள் ரேஷ்மி. "சொல்லு ரேஷ்" என்று தன் பிளூடுத்தைக் கழட்டி தன் அத்தை மகளை என்ன என்பது போல் பார்த்தான் யதுநந்தன். "அத்தான்... அந்தப் பொண்ணு இருக்கா இல்லையா!" என்று வராத கண்ணீரை வரவழைத்து இழுத்தாள் ரேஷ்மி. "எந்தப் பொண்ணு?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டான் யதுநந்தன். "அதான் அந்த பவதாரிணி" என்று இழுத்தாள். "ஆமா...அவளுக்கென்ன!" "அவள் என்கிட்ட என்னவெல்லாம் சொன்னாள் தெரியுமா!" என்று பொய்யாக கண்ணீர் வடித்தாள் ரேஷ்மி.
"ரேஷ் என்ன ஆச்சு டா... எதுக்கு இப்படி அழுகுற? சொல்லு அவள் என்ன சொன்னாள்" என்று அவன் அக்கறையாக கேட்கும் போதே ரேஷ்மியின் மனதெல்லாம் குளிர் காய்ந்தது. "அந்த பவதாரிணி என்னை சொடக்கு போட்டு கூப்பிட்டு... யது எனக்குத் தான்! இனி அத்தைப் பொண்ணுன்னு சொல்லிட்டு நீ இங்க வராத... இந்த வீட்டுல எல்லாரும் எனக்கு அடிமை... யதுவும் எனக்கு அடிமை தான்... நான் நில்லுன்னா நிப்பான் உட்காருன்னா உட்காருவான் அப்படின்னு என்கிட்ட திமிரா பேசினாள் அத்தான்.
வீட்லயும் அத்தை அச்சம்மா கிட்ட சொன்னால் நம்ப மாட்டிங்குறீங்க... சரியான மாயக்காரி போல அத்தான் அவள். அப்போ தான் உங்கள் முறைப் பொண்ணு இல்லையா அத்தான்... நான் இனி உங்க வீட்டுக்கு வரக் கூடாதா" என்று அழுதாள் ரேஷ்மி. ரேஷ்மி கூறுவதைக் கேட்ட யதுநந்தனின் கண்கள் கோபத்தில் சிவந்தது. அதைக் கண்ட ரேஷ்மியே ஒரு நொடி பயந்து விட்டாள். 'அவளுக்கு எவ்வளவு திமிர் எகத்தாளம் இருந்தால் இப்படி எல்லாம் பேசியிருப்பாள்... அவளை...' என்று மனதில் மிக கோபத்துடன் நினைத்தான் யதுநந்தன்
கருத்துகள்
கருத்துரையிடுக