மழை 12 "கிருஷ்ணா உன்கிட்ட என்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் ஆனால் மனசு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு... பொண்ணுங்க கிட்ட பிரண்ட்டைத் தாண்டி என் எல்லை போனது இல்லைனு உனக்கு நல்லாவே தெரியும். அப்படிப் பட்ட நான் ஒரு பொண்ணு கிட்ட எல்லை மீறிட்டேன்!" என்று உஷ்ண மூச்சுடன் தன் கல்லூரி தோழன் கிருஷ்ணாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்தான் யதுநந்தன். கிருஷ்ணாவும் கேரளாவின் நெறிமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவன் தான்.படிப்பதற்காக இப்போது சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கிறான். "இப்போ என்ன பண்ணப் போற யது?" என்று அந்தப் பக்கம் கிருஷ்ணா கேட்க, "என் தப்புக்கு பிராய்ச்சித்தம் பண்ண போறேன் டா" என்று பதில் கொடுத்தான் யதுநந்தன். "என்ன டா சொல்ற யது?" என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணா. "எனக்கு அவள் மேல காதல் இல்லை தான் கிருஷ்ணா. ஆனால் நான் தொட்ட அந்த முதல் பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அப்போ தான் என் குற்ற உணர்ச்சி மட்டுப்படும்" என்றான் கவலையுடன். "சரி டா உனக்கு தோன்றதை பண்ணு... நீ எப்பவுமோ நியாயஸ்தன் தான் டா... இதுலயும் அப்படி தான்"என்று நெகிழ்வுட...
மழை 11 தன் வீட்டிற்குள் வேகமாக ஓடி வந்தவள், யாரிடமும் முகம் கொடுக்காமல் அறைக் கதவை சாற்றிவிட்டு குமுறி அழுதாள். பின்ன பதினெட்டு வயது கூட அடையாத தான், இப்படி ஒரு ஆண்மகன்... அவன் இவள் காதலிக்கும் ஆண்மகனாக இருந்தாலும் கூட அவன் தொடும் போது அடித்து தடுத்திருக்க வேண்டுமே! அவனோடு எப்படி எல்லாம் இழைந்திருக்கிறோம் என்று தன்னை நினைத்தே அவமானமாக கூனிக் குறுகினாள் பவதாரிணி. அப்போது தான், 'நான் அவரை காதலிச்சேன் தான் ஆனால் அதுக்காக அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்காமலே எப்படி அவர் கூட ச்ச... ஆனால் அவர் என்கிட்ட எப்படி அப்படி! அவரும் என்னை காதலிக்குறாரா? ஆனால் நான் என் காதல்லை என்னை மீறி சொல்லும் போது அவர் என்னை விட்டு ஏன் விலகிப்போனாரு... ஒருவேளை இதெல்லாம் இப்போ கல்யாணத்துக்கு முன்னாடி தப்புன்னு அவரும் ரொம்ப ஃபீல் பண்றாரோ' என்று நினைத்த மங்கையவளுக்குத் தெரியவில்லை ஆணவனுக்குத் தன்னை காதலில் நெருங்கவில்லை காமத்தில் நெருங்கினான் என்று. சற்று நேரம் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தவள் பின் வேகமாக தன் கண்களைத் துடைத்தபடி,'எப்படி இருந்தாலும் நான் நந்தன் அத்தானைத் தான் க...